Vidyu Raman Wedding | டேட்டிங் ஆப்பில் மலர்ந்த காதல்.. தொழிலதிபரை மணந்தார் வித்யு ராமன்
நீதானே என் பொன் வசந்தம் படத்தில் நடித்த வித்யு ராமன் சமீபத்தில் தொழிலதிபர் ஒருவரை சென்னையில் திருமணம் செய்துகொண்டார்.
தமிழில் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடிப்பில் வெளியான படம் நீதானே என் பொன் வசந்தம் .
இந்த படத்தில் சமந்தாவின் நித்யா கேரக்டருக்கு தோழியாக நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் வித்யுலேகா ராமன். அந்தப்படத்தில் நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக அவர் நடித்து இருப்பார். இதனையடுத்து அவர், 'வீரம்', 'ஜில்லா', 'மாஸ்', ' புலி', 'பவர் பாண்டி', 'வாசுவும் சரவணனும் ஒன்ன படிச்சவங்க' உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை நடிகையாக நடித்து வருகிறார்.
பப்ளி தோற்றத்தில் இருந்த வித்யு, நகைச்சுவையில் கலக்கி வந்த காலத்தில் தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்தார். இவர் டேட்டிங் ஆப்பிள் தொழிலதிபர் சஞ்சய்யை சந்தித்துள்ளார். அப்போது முதலில் நண்பர்களாக பழகி வந்த இவர்கள் பின்பு காதலில் விழுந்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், "பொதுவாக எனக்கு டேட்டிங் ஆப்பிள் நம்பிக்கை இல்லை. அதில் புகைப்படம் பதிவிடுவது எனக்கு பிடித்தமான ஒன்று. நான் சஞ்சயை டேட்டிங் ஆப்பிள் தான் சந்தித்தேன். இரண்டு பேரும் எங்கள் புகைப்படத்தை கிளிக் செய்தோம். அவருடன் பேச ஆரம்பித்தவுடன் பல நாட்களாக அவரிடம் பேசியது போல் உணர்ந்தேன்" எனக் கூறினார்.
இந்நிலையில் இவருக்கும் தொழிலதிபர் சஞ்சய்க்கும் கடந்த ஆண்டு ஊரடங்கு காலத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். அவர் தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
View this post on Instagram
இந்நிலையில் சமீபத்தில் வித்யு- சஞ்சய் ஜோடிக்குத் திருமணம் நடந்து முடிந்துள்ளது. சென்னையில் நடந்து முடிந்து திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இவர் செல்வராகவனின் மனைவி கீதாவின் உறவினர். ஆதலால் கீதாஞ்சலி செல்வராகவன் தனது குடும்பத்துடன் வித்யுலேகா மெஹந்தி விழாவில் கலந்துகொண்ட திருமண புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.