The Road Trailer: உண்மை கதையில் ஸ்கோர் செய்யப்போகும் த்ரிஷா.. ட்ரெண்டிங்கில் “தி ரோடு” பட ட்ரெய்லர்..!
”என்ன நடந்தது, ஏன் நடந்தது ? என கேள்வி கேட்கும் த்ரிஷா, என்.எச். 44 சாலையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் எப்படி தொடர்ந்து விபத்துகள் ஏற்படுகிறது”
The Road Trailer : ஒவ்வொரு உயிரையும் குடிக்கும் உண்மை கலந்த விபத்து சம்பவத்தை அடிப்படையாக கொண்ட த்ரிஷாவின் தி ரோடு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
பொன்னியின் செல்வன் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பிறகு விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் லியோ படத்தில் த்ரிஷா நடித்துள்ளார். அடுத்ததாக அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் விடா முயற்சி படத்திலும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து மணிரத்னம் இயக்க உள்ள கமல்ஹாசனின் படத்திலும் த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி பிஸியாக இருக்கும் த்ரிஷாவின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தி ரோடு’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
மிரட்டும் பின்னணி இசையுடன் என்ன நடந்தது, ஏன் நடந்தது ? என கேள்வி கேட்கும் த்ரிஷா, என்.எச். 44 சாலையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் எப்படி தொடர்ந்து விபத்துகள் ஏற்படுகிறது என்ற திகிலூட்டும் குரலும் டிரெய்லரை மிரள செய்துள்ளன. அடுத்தடுத்து விபத்து, என்ன நடக்கும் என்று தெரியாத அச்சம், ரத்தத்தில் உயிருக்கு போராடும் காட்சிகள், மிரட்டல், விசாரணை என டிரெய்லரின் வரும் தீவிரத்தன்மை படம் முழுவதும் த்ரில்லருக்கு பஞ்சமிருக்காது என்பதை கூறுகிறது. ஒவ்வொரு காட்சிகளிலும் சாதாரணமான தோற்றத்துடனும், சீரியசான முகத்துடனும், உண்மையை கண்டறிய ஆர்வம் காட்டும் த்ரிஷா ஸ்கோர் செய்கிறார். டிரெய்லரின் த்ரில்லர் காட்சிகளுக்கு ஏற்ப படத்தின் பின்னணி இசையும் பார்வையாளர்களை மிரட்டுகிறது.
தி ரோடு படம் 2000ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுத்திருப்பதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. மதுரை என்.எச்.44 நெடுஞ்சாலையில் தொடர்ந்து நடக்கும் விபத்தும், அதன் பின்னணியில் இருக்கும் காரணத்தையும் கண்டறியும் ரோலில் த்ரிஷா வருகிறார். இந்த படத்தை அருண் வசீகரன் எழுதி இயக்கியுள்ளார். படத்தில் த்ரிஷா மட்டும் இல்லாமல் சந்தோஷ் பிரதாப், டான்சிங் ரோஸ் ஷபீர், எம்.எஸ். பாஸ்கர், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்துக்கு மிரட்டல் இசையை சாம் சிஎஸ் கொடுத்துள்ளார்.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவரும் அக்டோபர் 6ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று த்ரில்லர் படமான நாயகியில் த்ரிஷா நடித்து இருப்பார். ஆனால், அது பெரியதாக பேசப்படவில்லை. அதை தொடர்ந்து கதையின் நாயகியாக மீண்டும் த்ரிஷா நடித்திருப்பதால், இந்த படத்தில் அவர் அதிகம் ஸ்கோர் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொன்னியின் செல்வனிற்கு பிறகு த்ரிஷா மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க: Vijay Antony: "மகளுடன் நானும் இறந்துவிட்டேன்” - மனதை சுக்குநூறாக்கும் விஜய் ஆண்டனியின் ட்வீட்