மேலும் அறிய

தகாத முறையில் நடந்துகொண்ட நபர்..மாஸ் காட்டிய மணிரத்னம்...சுஹாசினி பகிர்ந்த ஷாக் தகவல்

படப்பிடிப்பின் போது தகாத முறையில் நடந்துகொண்ட நபரை இயக்குநர் மணிரத்னம் வேலையை விட்டு தூக்கியதாக நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளார்

திரையுலகை உலுக்கிய ஹேமா கமிட்டி அறிக்கை

கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே உலுக்கியது. இந்த அறிக்கையைத் தொடர்ந்து மலையாள சினிமாவைச் சேர்ந்த பல்வேறு நடிகைகள் திரைத்துறையைச் சேர்ந்த ஆண்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். மீடூ இயக்கத்திற்கு பின் திரைத்துறையில் பாலியல் குற்றங்கள் குறித்த பெரியளவிலான விளிப்புணர்வை ஹேமா கமிட்டி ஏற்படுத்தியது. மலையாளம் மட்டுமில்லாமல் தமிழ் , தெலுங்கு திரையுலகிலும் இதன் தாக்கம் பிரதிபலித்தது. தமிழ் திரையுலகில் நடிகர் சங்கம் சார்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க தனி கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச அளவிலும் ஹேமா கமிட்டி பல விவாதங்களை தொடங்கிவைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் கோவாவில் சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. இந்த விழாவில் திரைத்துறையில் பெண்களின் பாதுகாப்பு குறித்த சிறப்பு விவாதம் ஒருங்கிணைக்கப்பட்டது. நடிகை சுஹாசினி ,  நடிகை குஷ்பு உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். அப்போது நடிகை சுஹாசினி தனது கணவர் மணிரத்னம் பற்றிய தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டார்.

மணிரத்னம் எடுத்த அதிரடி முடிவு

" மற்ற துறைகளைக் காட்டிலும் திரைத்துறையில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. மற்ற துறைகளில் நீங்கள் வேலை செய்துவிட்டு மறுபடி உங்கள் வீட்டிற்கு இரவு திரும்பிச் செல்வீர்கள். ஆனால் சினிமா அப்படி இல்லை. 200 முதல் 300 பேர் கொண்ட படக்குழு ஒரு புது இடத்திற்கு சென்று ஒரு குடும்பமாக வாழ்வீர்கள். அப்போது தெரிந்தோ தெரியாமலோ சில எல்லைகள் மீறப்படுகின்றன. 200 பேர் கொண்ட ஒரு படக்குழுவில் குடும்பத்தை விட்டு தனியாக இருப்பவர்கள் மீது சிலர் அட்வாண்டேஜ் எடுத்துக் கொள்வார்கள். குறிப்பாக சினிமாவில் புதிதாக வரும் இளைஞர்களுக்கு போதுமான அனுபவம் இருப்பதில்லை . அதை சிலர் தவறாக பயண்படுத்திக்கொள்ள நினைப்பார்கள். மற்ற திரைத்துறைகளைக் காட்டிலும் மளையாள திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு. ஏனால் மலையாள படங்கள் பெரும்பாலும் வெவ்வேறு லோக்கேஷன்களில் எடுக்கப்படுகின்றன. இதனால் நடிகைகள் மாதக்கணக்கில் தங்கள் வீட்டை விட்டு பிரிந்து இருக்கிறார்கள். இதனால் அவர்களிடம் தவறாக நடந்துகொள்கிறார்கள் .

இன்று காலை என் கணவரிடம் உங்கள் படப்பிடிப்பின் போது ஒருவர் தகாத முறையில் நடந்துகொண்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். ஒரு முறை படப்பிடிப்பின் போது படக்குழுவைச் சேர்ந்த ஒருவர் வரம்பு மீறி நடந்துகொண்டதாகவும் அவரை வேலைவிட்டு தூக்கியதாகவும் அவர் தெரிவித்தார். வரம்பு மீறி நடந்துகொள்பவர் யாராக இருந்தாலும் அவரை வேலையைவிட்டு தூக்க வேண்டும்" என சுஹாசினி தெரிவித்தார்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Case: சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
TN Rain: வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.!
வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.! லிஸ்ட் இதோ.!
சோலி முடிஞ்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அவுட்! கண்ணீர் விடவைத்த நாகின் பாய்ஸ்!
சோலி முடிஞ்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அவுட்! கண்ணீர் விடவைத்த நாகின் பாய்ஸ்!
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan: Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Case: சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
TN Rain: வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.!
வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.! லிஸ்ட் இதோ.!
சோலி முடிஞ்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அவுட்! கண்ணீர் விடவைத்த நாகின் பாய்ஸ்!
சோலி முடிஞ்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அவுட்! கண்ணீர் விடவைத்த நாகின் பாய்ஸ்!
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
Seeman: இப்போ காளியம்மாளும் காலி.. அடிமேல் அடி வாங்கும் அண்ணன்! என்ன செய்யப்போகிறார் சீமான்?
Seeman: இப்போ காளியம்மாளும் காலி.. அடிமேல் அடி வாங்கும் அண்ணன்! என்ன செய்யப்போகிறார் சீமான்?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு; மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு; மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
எம்பி சுதா குறித்து அன்புமணி ராமதாஸ் பேச்சு... சூடான எம்பி - என்ன நடந்தது...?
எம்பி சுதா குறித்து அன்புமணி ராமதாஸ் பேச்சு... சூடான எம்பி - என்ன நடந்தது...?
NZ vs BAN: பாகிஸ்தானுக்கு நம்பிக்கைத் தரும் பங்களா பாய்ஸ்! ஆசையில் மண்ணை அள்ளிப்போடுமா நியூசிலாந்து?
NZ vs BAN: பாகிஸ்தானுக்கு நம்பிக்கைத் தரும் பங்களா பாய்ஸ்! ஆசையில் மண்ணை அள்ளிப்போடுமா நியூசிலாந்து?
Embed widget