Shanthi Williams: வாங்காத அடியே இல்லை.. நடுத்தெருவில் விட்ட கணவன்.. சாந்தி வில்லியம்ஸின் சோகக்கதை!
வில்லியம்ஸ் என்னோட வாழ்க்கையில் எந்த சப்போர்டும் செய்யவில்லை. பிரசவம் நேரம் கூட அவர் என்னோட இருந்தது இல்லை. அதில் எனக்கு வருத்தம் இருந்தது.
சென்னை கே.கே.நகரில் சுமார் ரூ.100 கோடி சொத்தை படம் எடுக்க வேண்டும் என தன் கணவர் வில்லியம்ஸ் அழித்த சோகக்கதையை நடிகை சாந்தி வில்லியம்ஸ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சுத்தமாக பாசம் இல்லை
அதில், “என்னோட கல்யாணம் லவ் மேரேஜ் எல்லாம் இல்லை. மிரட்டி, விருப்பம் இல்லாமல் தான் அந்த கல்யாணம் முடிந்தது. திருமணம் முடிந்து 3 மாதங்கள் வில்லியம்ஸ் ரொம்ப பிஸி. அதனால் திருமணம் முடிந்து விட்டுபோனவர் 3 மாசம் கழிச்சி தான் வந்து என்னை பார்த்தார். 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் இரண்டு பெண் குழந்தைகளும், 1985 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் இரண்டு பையன்களும் பிறந்தார்கள். ஆனால் வில்லியம்ஸ் என்னோட வாழ்க்கையில் எந்த சப்போர்டும் செய்யவில்லை. பிரசவம் நேரம் கூட அவர் என்னோட இருந்தது இல்லை. அதில் எனக்கு வருத்தம் இருந்தது. மேலும் குடும்பம் என்மேல் அவருக்கு சுத்தமாக பாசம் இருந்தது இல்லை. குழந்தைகள் மேல் ஓரளவு பாசம் இருந்தது.
திரும்ப வந்த முதல் மனைவி
முதல் குழந்தை பிறப்பதற்கு முன்னாடி வில்லியம்ஸின் முதல் மனைவி திரும்ப வந்தார். ஏதோ பிரச்சினை செய்ய, வில்லியம்ஸ் அவருடன் போக முயற்சி பண்ணார். அப்போது நான் அப்பாவிடம், ‘இப்பவாது என்னை விட்டுடுங்க. நான் சுதந்திரமாக இருக்கிறேன். நான் நடிச்சி என் குழந்தையை காப்பாற்றிக்கிறேன். உங்கள் காசு, பணம் எதுவும் வேண்டாம்.இவருடன் வாழ்க்கையே வேண்டாம் என சொன்னேன்.
நான் வில்லியம்ஸிடம் எனக்கு உங்க கூட வாழ பிடிக்கல. நீ அந்த பெண்ணோட போயிடுங்க என சொன்னேன். அதற்குள் என்ன நடந்ததோ அப்பெண் சிங்கப்பூருக்கு போய் விட்டார். இதனால் திரும்பவும் வில்லியம்ஸ் என்னை சமாதானம் செய்து வாழ வந்தார். நான் விவாகரத்து வேண்டும் என கேட்டேன். அவர் ஏதேதோ சொல்லி கிட்டதட்ட 25 ஆண்டுகள் வில்லியம்ஸூடன் நான் குப்பை கொட்டி விட்டேன்.
வில்லியம்ஸூக்கு வெளியே யார் மேல கோபம் இருந்தாலும் என்னை தான் வீட்டில் வந்து அடிப்பார். தூக்கிப்போட்டு எல்லாம் மிதிப்பார். வில்லியம்ஸ் என்னை வாங்காத அடியே இல்லை. என்னோட கடைசி பையன் பிறந்த நேரம் ஷூட்டிங் செட்டில் வைத்து என்னை அடித்தார். அங்கிருந்தவர்கள் இவரோட எல்லாம் வாழாதீர்கள் என சொன்னார்கள். அவர் என்னை காரில் வைத்து பூட்டி விட, உதவி கேமராமேன் தான் வந்து திறந்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இதையெல்லாம் பார்த்த என்னோட அக்கா, பொறுக்க முடியாமல் உடனே வக்கீலை வரவழைத்து விவாகரத்துக்கு முயற்சித்தார். ஆனால் வில்லியம்ஸ் வந்து அக்கா காலில் விழுந்து சமாதானம் செய்து கூட்டி வந்தார்.
ரூ.100 கோடி சொத்து
1997 ஆம் ஆண்டு அவருக்கு ரொம்ப உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 2003 ஆம் ஆண்டு ரயிலில் வைத்து மாரடைப்பு வந்தது. காப்பாற்றிக் கூட்டி வந்தேன். நீரிழிவு நோய் அதிகமாக இருந்ததால் கண் தெரியாமல் போய்விட்டது. தன்னோட வீடுன்னு நினைச்சி பக்கத்து வீட்டுக்கு போயிடுவாரு. சென்னை கே.கே.நகரில் சுமார் ரூ.100 கோடி சொத்தை படம் எடுக்க வேண்டும் என சொல்லி அதை விற்று விட்டார். அப்பாவிடம் சொல்லாமல் தரமாட்டேன் என சொல்ல என்னை அடித்து விட்டார். இதனால் பயத்தில் அந்த இடத்தின் பத்திரத்தை கொடுத்து விட்டேன். ஆனால் படம் நஷ்டமாகி, அவர் அடமானம் வைத்த நபரும் கடன் வாங்கி எதுவுமே கட்ட முடியாததால் அந்த இடம் அப்படியே ஜப்தியாகி விட்டது.
எங்க அம்மா அழுதே விட்டார்கள். சொந்த வீட்டில் வாழ்ந்த நாம் நடுரோட்டுக்கு வந்து விட்டோமே என புலம்பினார்கள். இந்த சம்பவத்துக்கு பிறகு எனக்கு வில்லியம்ஸை பார்க்கவே பிடிக்கவில்லை. கிட்டதட்ட 500 சவரன் நகையை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டார். நிறைமாத கர்ப்பிணியாக நான் கஷ்டப்படுவதை பார்த்து வில்லியம்ஸை நினைத்து மோகன்லால் கூட கோபப்பட்டார்” என சாந்தி வில்லியம்ஸ் தெரிவித்திருந்தார்.