அமரன் இயக்குநர் படத்தில் மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி...
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் D55 படத்தில் நாயகியாக சாய் பல்லவி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

அமரன் படத்தைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார். தனுஷின் 55 ஆவது படமாக உருவாகும் இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாரி 2 படத்தைத் தொடர்ந்து தனுஷூடன் சாய் பல்லவி இரண்டாவது முறையாக இப்படத்தில் இணைகிறார் என்பது குறிப்பிடத் தக்கது
நடிகர் தனுஷ் இந்தியில் நடித்துள்ள தேரே இஷ்க் மே திரைப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் போர் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். வேல்ஸ் ஃபிலிம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் அடுத்தபடியாக அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். வரலாற்றில் அதிக பேசப்பட்டாத நாயகர்களைப் பற்றிய படமாக இந்த படம் இருக்கும் என படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார்
தனுஷூடன் இணையும் சாய் பல்லவி
கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடித்த அமரன் படத்தின் மூலம் இந்தியளவில் கவனமீர்த்தார் ராஜ்குமார் பெரியசாமி. இப்படத்தில் சாய் பல்லவியின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. சாய் பல்லவியின் நடிப்பால் ஈர்க்கப்பட்ட இயக்குநர் தனுஷ் படத்திற்கும் அவரையே நாயகியாக நடிக்க வைப்பதில் தீர்மானமாக இருந்துள்ளார். மாரி 2 படத்தைத் தொடர்ந்து தனுஷூடன் இரண்டாவது முறையாக சாய் பல்லவி இப்படத்தில் நடிக்க இருக்கிறார். மாரி 2 படத்தில் தனுஷ் மற்றும் சாய் பல்லவியின் காம்போ ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இப்படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் பட்டிதொட்டி எல்லாம் வைரலானது. இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பதை ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்
தேரே இஷ்க் மே
இந்தியில் தனுஷ் நடித்துள்ள தேரே இஷ்க் மே திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஆனந்த் எல் ராய் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார். க்ரித்தி சனோன் படத்தின் நாயகியாக நடித்துள்ளார். ராஞ்சனா , அத்ரங்கி ரே ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக தனுஷ் ஆனந்த் எல் ராய் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இந்தி ரசிகர்களிடையே பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது





















