Rambha car accident: ‛அடக்கடவுளே... பாதுகாப்பா இரு ரம்பா...’ அடுத்தடுத்து ஆறுதல் கூறும் மீனா... சினேகா மற்றும் பலர்!
Rambha car accident: மனவேதனையில் இருக்கும் நடிகை ரம்பாவுக்கு நடிகைகள் மீனா, சினேகா உள்ளிட்ட பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
90களில் பிரபலமான நடிகையான ரம்பாவின் கார், விபத்துக்குள்ளானதில் அவரது மூன்று குழந்தைகள் உட்பட அவரும் படுகாயம் அடைந்தார். மற்றவர்கள் மீண்ட நிலையில் ரம்பாவின் இளைய மகள் சாஷா படுகாயம் அடைந்து, ஐசியூ.,வில் சிகிச்சை பெற்று வருகிறார். கனடாவில் வசித்து வரும் ரம்பா, அங்குள்ள பள்ளியிலிருந்து குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வரும் போது இந்த விபத்து ஏற்பட்டது .
இது தொடர்பான தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ரம்பா, தனது குடும்பத்திற்கு நேரம் சரியில்லை என்பது மாதிரியான பதிவை வெளியிட்டிருந்தார். தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கதாநாயகி என்பதால் அவருக்கு ஏற்பட்ட இந்த துன்பம், ரசிகர்கள் பலருக்கும் வேதனை அளித்துள்ளது. இது ஒருபுறமிருக்க, நடிகை ரம்பாவின் இந்த சோகமான தருணத்திற்கு அவரது நண்பர்கள், உறவினர்கள் பலரும் ஆறுதல் அளித்து வருகின்றனர்.
View this post on Instagram
குறிப்பாக அவருடைய சினிமா தோழர்கள் பலரும் அவரது பதிவில் ஆறுதல் கூறி வருகின்றனர். குறிப்பாக, 90களில் ரம்பாவுக்கு போட்டியாக இருந்த சினேகா , தனக்கு ஆறுதலை ரம்பாவிற்கு தெரிவித்துள்ளார். ‛அடக்கடவுளே... டேக் கேர் மா...’ என பதில் பதிவாக சினேகா வெளியிட்டுள்ளார். அத்தோடு சாந்தனுவின் மனைவியும், இயக்குனர் பாக்யராஜூவின் மருமகளுமான கீர்த்தியும், தனது ஆறுதலை ரம்பாவுக்கு தெரிவித்துள்ளார். அவரும் ‛அடக்கடவுளே ... ப்ளீஸ் டேக் கேர்...’ என்ற வார்த்தைகள் மூலம் ஆறுதல் கூறியுள்ளார்.
அதே போல, நடிகை மீனாவும் தனது ஆறுதலை ரம்பாவுக்கு தெரிவித்துள்ளார்.
‛அடக்கடவுளே... ஜெயம்மா... கவனமாக இரு... திடமாக இரு... கவலைப்படாதே சாஷா விரைவில் குணமடைவாள்... என் அன்பும் பிரார்த்தனையும் உண்டு’ என மீனா தன் ஆறுதல் பதிவில் கூறியுள்ளார்.
அதே போல காயத்ரி ரகுராம் மற்றும் ஸ்ரீதேவி விஜயகுமார் உள்ளிட்ட பலரும் ரம்பாவிற்கு தனது ஆறுதலை ட்விட்டர் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தொடர்புடைய செய்திகள் இதோ...
நடிகை ரம்பா வந்த கார் பயங்கர விபத்து... தீவிர சிகிச்சையில் குடும்பம்!
குழந்தையுடன் பாடி மகிழ்ந்த ரம்பா வீடியோ... 24 மணி நேரத்திற்குள் நடந்த விபத்து...!
ரூ.1.5 கோடி மதிப்புள்ள டெஸ்லா கார்... ஆனாலும் விபத்தில் சிக்கிய ரம்பா!