watch video : எக்கச்சக்க அழகுடன் எட்டுத்திக்கும் பாட்டுக்கு நடனமாடிய பிரியா பவானி சங்கர்... வைரல் வீடியோ!
நடிகை பிரியா பவானி சங்கர் இன்ஸ்டா வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்ப்பதற்கென்றே இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
கோலிவுட்டில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து , நடிகையாக மாறியவர்களுள் பிரியா பவானி சங்கரும் ஒருவர். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம் , மான்ஸ்டர், மாஃபியா என அடுத்தடுத்த படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான பிளட் மணி என்னும் வெப் தொடரிலும் நடித்திருந்தா பிரியா பவானி சங்கர். தற்போது மலையாள நடிகை பார்வதி மற்றும் நாக சைத்தன்யாவுடன் இணைந்து மற்றுமொரு வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த வெப் தொடரை யாவரும் நலம் , 24 உள்ளிட்ட படங்களை இயக்கிய விக்ரம் குமார் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், நடிகை பிரியா பவானி சங்கர் இன்ஸ்டா வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்ப்பதற்கென்றே இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்தவகையில், கடந்த 2013 ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த இரண்டாம் உலகம் திரைப்படத்தில் வரும் கனிமொழியே பாடலுக்கு நடிகை பிரியா பவானி சங்கர் நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், இந்த பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாட்டு என்று தெரிவித்த பிரியா பவானி சங்கர், "நான் எட்டுத்திக்கும் வரையிலேயே நான் இல்லை என்று போவதா" என்ற பாடலில் வரும் நடனத்தை அப்படியே ஆடுகிறார்.
View this post on Instagram
முன்னதாக, எப்போதுமே ஹோம்லி கேர்ளாக பார்த்து பழகிய பிரியா பவானி சங்கரை இடை தெரியும் உடை அணிந்ததை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை போலும் , புகைப்படங்களுக்கு கீழே ஷாக்கிங் கமெண்டுகளை தெறிக்கவிட்டு வந்தனர்.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்