பஞ்சாப் அணி வீரரோடு தொடர்புபடுத்தி பேசிய ரசிகர்...ப்ரீத்தி ஜிந்தா கொடுத்த பதிலில் தெறித்து ஓடிவிட்டார்
பஞ்சாப் அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் உடன் தன்னை தொடர்புபடுத்தி பேசிய ரசிகருக்கும் நடிகை ப்ரித்தி ஜிந்தா பதிலளித்துள்ளார்

ப்ரீத்தி ஜிந்தா
மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே கவனமீர்த்தவர் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. சினிமா தவிர்து ஐ.பி.எல் இல் பஞ்சாப் அணியின் உரிமையாளர் இவர். ஒவ்வொரு போட்டியின் போதும் மைதானத்திற்கு வந்து தனது அனிக்கு ஆதரவு அளித்து வரும் ப்ரீத்தி ஜிந்தாவிற்கு ரசிகர்கள் ஆதரவு எப்போதும் இருந்து வருகிறது. பஞ்சாப் அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் உடன் தன்னை தொடர்புபடுத்தி பேசிய ரசிகருக்கும் நடிகை ப்ரித்தி ஜிந்தா பதிலளித்துள்ளார்
கிளென் மேக்ஸ்வெல் - ப்ரீத்தி ஜிந்தா
தனது எக்ஸ் பக்கத்தில் ப்ரீத்தி ஜிந்தா ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். ஐ.பி.எல் குறித்தும் தனது அணி குறித்தும் , தான் நடித்த படங்கள் குறித்தும் பல கேள்விகள்க்கு அவர் பதிலளித்தார். ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் பஞ்சாப் அணியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் உங்களை திருமணம் செய்துகொள்ளாததால் தான் சரியாக விளையாடவில்லையா என்கிற கேள்வியை கேட்டார். இதற்கு ப்ரீத்தி ஜிந்தா அளித்துள்ள பதில் ரசிகர்களை கவர்ந்துள்ளது
ரசிகருக்கு ப்ரீத்தி ஜிந்தா கொடுத்த பதில்
"இந்தக் கேள்வியை மற்ற அணிகளின் ஆண் உரிமையாளர்களிடமும் கேட்பீர்களா, அல்லது பெண்களுக்கு மட்டும்தான் இந்த பாகுபாடு இருக்கிறதா? நான் கிரிக்கெட்டுக்குள் நுழையும் வரை, பெண்கள் கார்ப்பரேட் அமைப்புகளில் வாழ்வது எவ்வளவு கடினம் என்று எனக்குத் தெரியாது. நீங்கள் நகைச்சுவைக்காக இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன், ஆனால் நீங்கள் உண்மையில் உங்கள் கேள்வியைப் பார்த்து நீங்கள் என்ன சொல்ல முயற்சிக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறேன், ஏனென்றால் நீங்கள் என்ன சொல்ல முயற்சிக்கிறீர்கள் என்பது உங்களுக்கு உண்மையிலேயே புரிந்தால், அது சரி இல்லை என்பது தெரியும் ! கடந்த 18 ஆண்டுகளாக மிகவும் கடினமாக உழைத்து எனது மதிப்புகளைப் பெற்றுள்ளேன் என்று நினைக்கிறேன், எனவே தயவுசெய்து எனக்கு உரிய மரியாதையை அளித்து பாலின சார்பை நிறுத்துங்கள். நன்றி." என அவர் அந்த நபருக்கு கொடுத்த பதில் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. இதனையடுத்து அந்த நபர் அந்த கேள்வியை நீக்கி ஓடியேவிட்டார்.
Will you ask this question to the male team owners of all teams, or is this discrimination just towards the women? I never knew how difficult it is for women to survive in corporate setups until I got into cricket. I’m sure you asked this question out of humour, but I hope you… https://t.co/cBX4SbqAwS
— Preity G Zinta (@realpreityzinta) May 13, 2025





















