Watch Video | மாலத்தீவு கடலில் நீச்சல் உடையில் பீச் டான்ஸ் ஆடிய பூஜா! வைரல் வீடியோ!
மாலத்தீவில் கடலை பார்த்தபடி பீச் டான்ஸ் ஆடுகிறார் பூஜா.
`மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, நடிகர் விஜய் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் `பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள `டாக்டர்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெகு மக்கள் ஆதரவோடு திரையிடப்பட்டு வருகிறது. `பீஸ்ட்’ படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பீஸ்ட் திரைப்படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
தமிழில் முகம் காட்டிய நடிகை என்றாலும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார் பூஜா. அதனால் பீஸ்டின் ரிலீசுக்கு பிறகு தமிழிலும் பூஜா ஒரு ரவுண்ட் வருவார் எனத் தெரிகிறது. இந்த நிலையில் பூஜாவின் சோஷியல் மீடியா நகர்வுகள் இணையத்தில் ஹிட் அடித்து வருகின்றன. குறிப்பாக தெலுங்கு ரசிகர்கள் பூஜா விஷயத்தில் தீயாய் வேலை செய்கிறார்கள். சாதாரண ஒரு புகைப்படத்தையும் அவர்கள் ட்ரெண்டாக்கி வருகிறார்கள். அப்படி இருக்க மாலத்தீவில் நீச்சல் உடையுடன் பீச் டான்ஸ் ஆடிய பூஜாவின் வீடியோவை இந்திய அளவில் வைரலாக்கியுள்ளனர் ரசிகர்கள். மாலத்தீவில் கடலை பார்த்தபடி பீச் டான்ஸ் ஆடுகிறார் பூஜா.
#Poojahegde enjoying in Maldives ♥️ pic.twitter.com/0iAGVIKryQ
— Pooja Hegde FC (@PoojaHegdeTFC) November 14, 2021
முன்னதாக, சில தினங்களுக்கு முன்னதாக ட்விட்டரில் #AskPoojaHegde என்ற ஹேஸ்டேக்கின் கீழ் ரசிகர்களிடையே கலந்துரையாடினார். அவர் கேள்வி கேட்கலாம் எனத் தெரிவித்ததுமே ரசிகர்கள் கேள்விகளை அள்ளித்தூவினர். பலர் தங்களுக்கு பிடித்த நடிகர்கள் குறித்தும், விளையாட்டு வீரர்கள் குறித்தும் கேள்வி எழுப்பினர். குறிப்பாக விஜய் ரசிகர்கள் பீஸ்ட் குறித்தும் , விஜய் குறித்தும் ஆர்வமாக பல கேள்விகளை கேட்டனர். அதில், விஜய் குறித்து ஒரு வார்த்தை சொல்லுங்கள் என ஒரு ரசிகர் கேள்வி எழுப்பினார்.
One word is not enough..but….I’ll try…ummm… SWEETEST. #AskPoojaHegde https://t.co/qBDXfsO9pG
— Pooja Hegde (@hegdepooja) October 18, 2021
அதற்கு பதில் அளித்த பூஜா, ஒரு வார்த்தையா மிகக் கஷ்டம்.. ஆனால் முயற்சிக்கிறேன். ஸ்வீட்டஸ்ட். எனத் தெரிவித்தார். பூஜாவிடம் இன்னும் பலர் சுவாரஸ்யமான சில கேள்விகளையும் கேட்டனர். கால்பந்தில் பிடித்தது யார்? ரொனால்டோவா? மெஸ்சியா என ஒருவர் கேட்க, மெஸ்ஸிதான் என நச்சென பதில் அளித்தார் பூஜா.கேஷ் ஆப் க்ளான்ஸ் கேம் குறித்தும், தன்னை மிகவும் பாதித்த திரைப்படம் இண்டூ தி வைல்ட் என்றும் தெரிவித்தார்
View this post on Instagram