Parvathy Thiruvothu : "அது ஒரு சைபர் ஃப்ராட்..." நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்தது ஏன் ? நடிகை பார்வதி விளக்கம்
தனுஷ விமர்சித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில் நடிகை பார்வதி திருவொத்து நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்தது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்
![Parvathy Thiruvothu : Actress Parvathy Thiruvothu explains why she supported actress Nayanthara on dhanush noc issue Parvathy Thiruvothu :](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/24/16a07363d6062a8dc096e2566d8e22881732434777309572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நயன்தாரா
நடிகை நயன்தாரா கடந்த நவம்பர் 16 ஆம் தேதி மூன்று பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். நயன்தாரா பற்றி உருவான ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்த அனுமதி கேட்டும் தனுஷ் அனுமதி கொடுக்காததால் நயன்தாரா இந்த அறிக்கையை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து தனுஷ் மீது மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். சட்டரீதியான காரணங்களால் என்.ஓ.சி கொடுக்க முடியாவிட்டால் தன்னால் புரிந்துகொள்ள முடிந்திருக்கும் ஆனால் தன்மேல் உள்ள தனிபட்ட வெறுப்பினால் தனுஷ் அனுமதி வழங்கவில்லை என இந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார் மேலும் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் தனது தனிப்பட்ட செல்ஃபோனில் எடுக்கப்பட்ட காட்சிகளுக்காக தனுஷ் 3 கோடி ரூபாய் கேட்டதாக நயன்தாரா தெரிவித்திருந்தார்.
தமிழ் முதல் மளையாளத் திரையுலகைச் சேர்ந்த பல நடிகைகள் நயன்தாராவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தார்கள். தனுஷூடன் மரியான் படத்தில் நடித்த பார்வதி திருவொத்து நயன்தாராவில் கமெண்ட் செய்து தனது ஆதரவை தெரிவித்திருந்தார். மேலும் தனுஷ் படங்களில் நடித்த அனுபவமா பரமேஷ்வர் , நஸ்ரியா , ஸ்ருதி ஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டவர்கள் இந்த பதிவை லைக் செய்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்தது குறித்து நடிகை பார்வதி திருவொத்து மலையாள ஊடகத்திற்கு விளக்கமளித்துள்ளார்.
நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்தது ஏன் ? பார்வதி விளக்கம்
" லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது கரியரை சொந்தமாக உருவாக்கியர். தனக்கு நடந்ததை மூன்று பக்க அறிக்கையாக அவர் வெளியிட்டிருக்கிறார் .நம் எல்லாருக்கும் அவரை நன்றாக தெரியும் .காரணமின்றி இந்த மாதிரியான ஒரு அறிக்கையை வெளியிட மாட்டார் . அதனால் தான் அவருக்கு நான் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்த எல்லாரும் அவர் பக்கம் இருக்கும் உண்மையை நம்புகிறோம். தனது வாழ்க்கையில் வந்த நெகட்டிவிட்டி எல்லாம் கடந்து நயன்தாரா இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். இந்த ஒட்டுமொத்த சர்ச்சையும் ஒரு சைபர் ஃப்ராட். எந்த ஆதரவும் இல்லாமல் தனியாக நிற்பது எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியும் . ஒருவருக்கு நாம் கொடுக்கும் சின்ன ஆதரவு பெரிய மாற்றத்தை கொண்டு வரக்கூடியது. அதனால் தான் அவருக்கு நான் ஆதரவு தெரிவித்தேன். இந்த மாதிரி நிலையில் இருக்கும் எல்லாருக்கும் என் ஆதரவை நான் தெரிவிப்பேன்.' என பார்வதி தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)