Chiththa: "2023ம் ஆண்டின் மிகச்சிறந்த படம் சித்தா" லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா புகழாரம்!
Chiththa: 2023ம் ஆண்டின் மிகச்சிறந்த படம் சித்தா என்று லேடி சூப்பர்ஸ்டார் நடிகை நயன்தாரா புகழாரம் சூடியுள்ளார்.
சித்தா:
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து அழுத்தமான கதைக்களத்தை கையாண்ட சித்தா படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான சித்தா படம் ரூ.25 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
2023ம் ஆண்டில் வெளியான சிறந்த படம்:
கமல்ஹாசன், மணி ரத்னம் உள்ளிட்ட பலரும் சித்தா படத்தை பாராட்டி தள்ளினர். அந்த வரிசையில் நடிகை நயன்தாராவும் சித்தா படத்தை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட இன்ஸ்டகிராம் பதிவில், ”2023ம் ஆண்டு வெளிவந்த சிறந்த படங்களில் சித்தா படமும் ஒன்று. சித்தா படத்தின் மூலம் சித்தார்த் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சித்தா படத்தின் மூலம் இயக்குநர் அருண்குமார் சிறந்த படப்பை வெளிப்படுத்தியுள்ளார். சித்தா படத்தின் ஒட்டு மொத்த குழுவின் உழைப்பால் தான் அருண்குமார் மற்றும் சித்தார்த்தால் மிக சிறந்த படைப்பை தர முடிந்தது” என உணர்ச்சிவசப்பட்டு குறிப்பிட்டுள்ளார்.
#Chithha in theatres from today!🎬🍿
— Think Music (@thinkmusicindia) September 28, 2023
Don't miss 'Chithha'—a remarkable film by #SUArunKumar, Witness it in theaters and be part of this incredible journey. #ChithhaMovie pic.twitter.com/URWKdLGfak
2023ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் ஜவான் மற்றும் இறைவன் படம் வெளிவந்தது. ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைத்துள்ளது.
மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: "பிக்பாஸ் வீட்டை கலங்கடித்த விஜயகாந்த் மறைவு" கண்கலங்கி பேசிய கமல்ஹாசன்!