மேலும் அறிய
Advertisement
Bigg Boss 7 Tamil: "பிக்பாஸ் வீட்டை கலங்கடித்த விஜயகாந்த் மறைவு" கண்கலங்கி பேசிய கமல்ஹாசன்!
Bigg Boss 7 Tamil: ”விஜயகாந்த் போல் நாம் வாழ முடியுமா என்பதை யோசித்தால் அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் புரியும்” என்று கமல்ஹாசன் உருக்கமாக பேசியுள்ளார்.
Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியின் வீக் என்ட் எபிசோடில் பேசிய கமல்ஹாசன் விஜயகாந்த் மறைவு குறித்தும், அவரது இழப்பால் ஏற்பட்டுள்ள சோகம் குறித்தும் பேசியுள்ளார்.
பிக்பாஸ்:
விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை நெருங்கியுள்ள நிலையில் போட்டியாளர்களுக்கு இடையே டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் கப்பை வெல்வதற்கான டாஸ்குகள் வைக்கப்பட்டன.
இந்த நிலையில் வாரத்தின் இறுதி நாளான இன்று போட்டியாளர்களை கமல்ஹாசன் சந்திப்பது வழக்கம். அந்த வகையில் இன்று போட்டியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “என்னுடைய சோகத்தை, நம்மில் பலருடைய சோகத்தை இந்த மேடையில் பகிர்ந்து கொள்வதை என் கடமையாக நினைக்கிறேன். விஜயகாந்த், அவரை பற்றி நினைத்து கண்ணீர் சிந்திக் கொண்டிருப்பதை விட, நினைத்து புன்னகிப்பதற்கு நிறைய விட்டுச் சென்றிருக்கிறார். இதுபோல் நாம் வாழ முடியுமா என்பதை யோசித்தால் அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமும், நாம் வாழப்போகும் வார்த்தைக்கு அர்த்தமும் வரும்” என மன உருக்கத்துடன் பேசியுள்ளார்.
View this post on Instagram
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று முன்தினம் உடல்நல குறைவால் காலமானார். அவரது உடல் நேற்று மாலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக விஜயகாந்த் உடலுக்கு கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய அவர், எளிமை, நட்பு, பெருந்தன்மை உள்ளிட்ட வார்த்தைகளை ஒரே மனிதருக்கு மட்டுமே சொல்ல முடியும். அது விஜயகாந்த் தான். நட்சத்திர அந்தஸ்து வருவதற்க்கு முன்னர் என்னிடம் எப்படி பழகினாரோ? அப்படி தான் இவ்வளவு உயரம் வந்த பிறகும் பழகினார்.
விஜயகாந்திடம் எவ்வளவு பணிவு உள்ளதோ, அந்த அளவுக்கு நியாயமான கோபமும் வரும். அதுவே அவரிடம் எனக்கு பிடித்தது. விஜயகாந்த் கோபத்தின் ரசிகன் நான். அதனால் தான் அவர் மக்கள் பணிக்கு வந்தார் என்றே நான் நினைக்கிறேன். இப்பபடிப்பட்ட நேர்மையாளரை இழந்திருப்பது ஒருவகை தனிமை தான். நல்ல நண்பருக்கு விடைகொடுத்துவிட்டு செல்கிறேன்" என வருத்தத்துடன் பேசி இருந்தார்.
மேலும் படிக்க: Blue Sattai Maaran: விஜயகாந்த் நன்றியை மறந்து புத்தாண்டு கொண்டாடுங்க: சூர்யா உள்ளிட்ட நடிகர்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
தமிழ்நாடு
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion