ஆடிஷனுக்கு போன நடிகையிடம் அசிங்கமாக நடந்து கொண்ட பிரபல நடிகர்? பரபரப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டு!
பிரபல இளம் நடிகை ஒருவர் ஆடிஷனுக்கு தன்னை வரவைத்து... பிரபல நடிகர் தன்னிடம் அத்து மீறி நடந்து கொண்டதாக கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரையுலகை சேர்ந்த பிரபலங்கள், ஒரு சிலர் மட்டுமே திரைக்கு பின்னால் தங்களுக்கு நடக்கும் மோசமான அனுபவங்கள் குறித்து வெளியே கூறுகிறார்கள். இன்னும் சிலர், பல மோசமான அனுபவங்களை தங்களுக்குளேயே புதைத்து கொண்டு கடந்து செல்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம், வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்பதும் தங்களின் சினிமா காரியர் பாதிக்கப்படும் என்பது தான்.
ஆனால் ஒரு சில நடிகைகள்... மிகவும் துணிச்சலாக சில விஷயங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள். அந்த வகையில் தான் தற்போது 'சினம்' ,'உயிர் வரை இனித்தாய்' போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை நர்வினி டெரி ரவிசங்கர் திருமணம் ஆன பிரபல நடிகர் குறித்து அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை கூறி அதிர வைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமானவர் தான் அஜ்மல் அமீர். உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பை முடித்த ஒரு மருத்துவரான இவர்... நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேட துவங்கினார். அந்த வகையில், இவர் 2005-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பிப்ரவரி 14 படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து, மலையாளத்தில் Pranayakalam என்கிற படத்தில் ஹீரோவாக நடித்தார்.
தமிழில், இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் அஜ்மல் நடித்த 'அஞ்சாதே' திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்த படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம் ஃபேர் விருதையும் பெற்றார். ஹீரோவாக மட்டும் இன்றி... சில படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் கடந்த ஆண்டு, 'தி கோட்' திரைப்படம் வெளியானது.
தொடர்ந்து தன்னை ஹீரோவாக சினிமாவில் நிலை நிறுத்தி கொள்ள போராடி வரும் அஜ்மல் அமீர் மீது நர்வினி டெரி கூறியுள்ள குற்றச்சாட்டு திரையுலகில் ஹாட் நியூஸாக மாறி இருக்குறது. இதுகுறித்து அவர் கூறும் போது... " ஒருமுறை என் நண்பருடன் பிரபல மாலுக்கு நான் சென்றிருந்த போது, அங்கு நடிகர் அஜ்மல் அமீரை சந்தித்தேன். அவர் தனது அடுத்த படத்திற்காக ஹீரோயினை தேடிக்கொண்டு இருப்பதாகவும், உங்களுக்கு விருப்பம் இருந்தால் ஆடிஷனுக்கு வாருங்கள் என்று கூறினார். நானும் மறுநாள் ஆடிஷனுக்காக அவரது அவரது அலுவலகத்துக்கு சென்றேன்.
அங்கு அஜ்மல் என்னிடம் அத்துமீறும் விதத்தில் நடந்து கொண்டதோடு... அவருடன் நெருக்கமாக நடனம் ஆடச்சொல்லி வற்புறுத்தினார். நான் அதற்க்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதே போல் என்னை கட்டிப்பிடிக்க முயன்றார். அந்த நேரத்தில் யாரோ ஒருவர் காலிங்பெல்லை அடிக்க, அஜ்மல் கதவை திறந்ததும் நான் தப்பித்தால் போது என அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன். இந்த விஷயத்தை நான் அப்போதே சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அன்றிரவு நான் டென்மார்க் சென்றுவிட்டதால் வெளிப்படுத்த முடியாமல் போனது.

இந்த விஷயத்தை சில மாதம் கழித்து, திரைத்துறையை சேர்ந்த எனது நண்பர் ஒருவரிடம் சொன்னேன். அவர் அஜ்மலை நேரில் அழைத்து வார்னிங் கொடுத்தார். மேலும் அஜ்மல் மீது போலீசில் நான் புகார் கொடுத்திருக்க வேண்டும் என நினைத்தேன்... ஆனால் சினிமாவில், பல நல்ல மனிதர்களை நான் பார்த்துள்ளேன். இது போன்ற ஒரு சிலரால், நல்லவர்கள் பாதிக்கப்பட கூடாது என எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியுள்ளார்.
தொடர்ந்து முக்கியமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் அஜ்மல் அமீருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் நர்வினி டெரி இப்படி ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதற்க்கு அஜ்மல் என்ன விளக்கம் கொடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.





















