Actress nandita swethaa : உனக்கு உடல் எடை அதிகம்...வேண்டும் அதிக கவனம்..! ரசிகர் செய்த கமெண்ட்.. பதிலடி கொடுத்த நடிகை!
'அட்டகத்தி' நந்திதா இறுக்கமான நீல நிற டி-ஷர்ட் அணிந்து சுவற்றில் சாய்ந்தபடி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்ஸாக வைத்தார்.
தமிழ் சினிமாவை கடந்து இந்தியா முழுவதும் நடிகை மற்றும் நடிகர்கள் தாங்கள் சார்ந்த புகைப்படங்களை ரசிகர்கள் முன்பு வெளிக்காட்ட ஆர்வம் காட்டி வருகின்றனர். அதே வரிசையில் நடிகைகளை தொடர்ந்து சின்னத்திரை பிரபலங்களும் போட்டோஷூட் எடுத்து தங்களது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
அப்படி நடிகைகள் தங்களது புகைப்படங்களை வெளியிடும்போது ரசிகர் மற்றும் நெட்டிசன்களால் மோசமான விமர்சனத்திற்கு உள்ளாகி வருவதும் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றது. இதில், அதிகளவில்நெட்டிசன்கள், நடிகைகளின் உடல் சார்ந்த உறுப்புகளை கிண்டல் செய்தும், நிர்வாண புகைப்படங்களை கேட்டும் தொந்தரவு செய்து வருகின்றனர்.
அந்தவரிசையில் தற்போது 'அட்டகத்தி' நந்திதா ஸ்வேதாவும் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நந்திதா இறுக்கமான நீல நிற டி-ஷர்ட் அணிந்து சுவற்றில் சாய்ந்தபடி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்ஸாக வைத்தார்.
View this post on Instagram
அதைபார்த்து கமெண்ட் செய்த நெட்டிசன்ஒருவர், "உங்கள் உடலமைப்பில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். உங்கள் உடலை பார்த்தால் ஆண்டிபோல் காட்சியளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.இதை பார்த்து கோவமடைந்த நடிகை நந்திதா, இந்த வகையான மக்கள் நரகத்தில் வாழ கூடியவர்கள். நானும் ஒரு மனிதன் தான் நானும் சில விஷயங்களை கடந்து செல்கிறேன்.
எப்படி இவ்வளவு உணர்ச்சியற்று இவர்களால் இப்படி எழுதவும் முடிகிறது. நான் என் உடலை நேசிக்கிறேன், என் வாழ்க்கை, என் உடல் அமைப்பை,இதையே நான் விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்