Namitha | சீரியலில் எண்ட்ரியான நமீதா! - ரசிகர்களுக்கு கொடுத்த ஷாக்கிங் சர்ப்ரைஸ்!
நடிகை ராதிகா போல சின்னத்திரை, வெள்ளித்திரை என பேலன்ஸ் செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழ் ரசிகர்களை ‘மச்சான்ஸ்’ என அழைத்து ஒரு காலத்தின் சென்ஷேசன் நடிகையாக இருந்தவர் நடிகை நமீதா. இவர் விஜயகாந்த் நடிப்பில் உருவான ‘எங்கள் அண்ணா ‘ திரைப்படம் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். ஆணை, ஏய், சாணக்யா, அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மலையாளத்தில் ‘புலி முருகன்’ என்ற படத்திலும் நடித்திருந்தார். நமீதா நடிக்க தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் அவருக்கான கால் ஷீட்டிற்காக இயக்குநர்கள் காத்துக்கிடந்தனர். ஆனால் சிறிது காலத்திற்கு பிறகு மார்க்கெட்டுகள் மெல்ல மெல்ல குறைய ஆரமித்தது இதற்கு காரணம் அவரின் உடல் எடை அதிகரிப்புதான் என ரசிகர்களும் கிசு கிசுக்க தொடங்கினர். அதன் பிறகு தனியார் தொலைக்காட்சியின் ஒன்றில் நடன நடுவராக பங்கேற்றார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் இழந்த வாய்ப்பை மீட்டு விடலாம் என எண்ணிய நடிகைக்கு அது பெரிதாக கை கொடுக்கவில்லை. அதன் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சௌத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
View this post on Instagram
இந்நிலையில் நமீதா மீண்டும் சின்ன திரைக்கு திரும்பியுள்ளார். தேவயானி நடிப்பில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘ புதுப் புது அர்த்தங்கள் ‘ என்ற சீரியலில் தற்போது களமிறங்கியுள்ளார் நமீதா. இதன் புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நமீதா தொடர்ந்து நடிப்பாரா அல்லது தற்போது கவுரவ வேடத்திற்காகத்தான் களமிறங்கியுள்ளாரா என்பது சரியாக தெரியவில்லை ஆனால் இந்த அறிமுகம் மூலம் அவருக்கு சீரியலில் நடிப்பதில் விருப்பம் இருக்கிறது என்பதை தெளிவாக புரிந்துக்கொள்ள முடிகிறது. அப்படி நமீதா முழு நேரமாக சீரியலில் இறங்கிவிட்டால் அவருக்கான அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்து குவியும் என்பதில் சந்தேகமே இல்லை. முன்னதாக வெள்ளித்திரையில் கோலோச்சிய நடிகைகள் பலரும் தங்களுக்கு வாய்ப்புகள் குறையும் சமயங்களில் சின்னத்திரையை நாடுவது வழக்கமான ஒன்றுதான். அப்படிதான் நடிகை நமீதா திரும்பியுள்ளாரா அல்லது நடிகை ராதிகா போல சின்னத்திரை, வெள்ளித்திரை என பேலன்ஸ் செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
View this post on Instagram
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நமீதா திருமணத்திற்கு பிறகு கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் மட்டுமே நடித்து வந்தார். பிறகு ‘நமீதா தியேட்டர்ஸ்’ என்ற ஒடிடி தளம் ஒன்றையும் துவங்கியுள்ளார். தற்போது தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் பைலிங்குவல் படமாக ‘பவ் பவ் ‘ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தயாரிப்பாளரும் நமீதா என்பதும் கூடுதல் தகவல் .