”அன்று ஷங்கரின் வேறு முகத்தை பார்த்தேன் “ - காதலன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த நக்மா!
உணவு இடைவேளையில் நக்மா, ஷங்கர் , ஒளிப்பதிவாளர் ஜீவா உள்ளிட்டவர்கள் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க... அப்போது இளைஞர்கள் சிலர் நக்மாவிடம் புகைப்படம் எடுக்க வேண்டும் என வந்திருக்கின்றனர்
தமிழ் சினிமாவின் 90 களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை நக்மா. நடிகை ஜோதிகாவின் சகோதரி. முதன் முதலில் தனது ஆக்டிங் கெரியரை பாலிவுட்டில் தொடங்கிய நக்மாவிற்கு பெரிதாக வரவேற்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு 1994 ஆம் ஆண்டு வெளியான காதலன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அடியெடுத்து வைத்தார். முதல் படத்திலேயே நக்மாவை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள தொடங்கி விட்டார்கள் . அதன் பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்பூரி, பஞ்சாபி, மராத்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நக்மா காதலன் திரைப்படத்தில் நடித்த சமயத்தில் அவருக்கு நிகழ்ந்த ஒரு மோசமான அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.
View this post on Instagram
காதல் :
காதலன் திரைப்படம் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், பிரபுதேவா, நக்மா, வடிவேலு நடிப்பில் வெளியான திரைப்படம். இந்த படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. படத்தின் அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். குறிப்பாக என்னவளே...அடி என்னவளே பாடல் பலருக்கும் நெருக்கமான பாடலாக இப்போதும் இருக்கிறது. இந்த பாடலை எடுத்துக்கொண்டிருந்த சமயத்தில், உணவு இடைவேளையில் நக்மா, ஷங்கர் , ஒளிப்பதிவாளர் ஜீவா உள்ளிட்டவர்கள் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க... அப்போது இளைஞர்கள் சிலர் நக்மாவிடம் புகைப்படம் எடுக்க வேண்டும் என வந்திருக்கின்றனர்.
அப்போது ஜீவா அவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார் பின்னர் வாருங்கள் என கூறினாராம். அவர்கள் உடனடியாக புகைப்படம் வேண்டும் என கேட்க, படக்குழுவினர் மறுத்துள்ளனர். உணவு இடைவேளை முடிந்ததும் மீண்டும் ஷூட்டிங் துவங்கியுள்ளது. அதே நேரம் அந்த லொகேஷனில் வேறு ஒரு படத்தின் ஷூட்டிங்கும் நடந்துக்கொண்டிருந்தது. அந்த ஷூட்டிங்கில் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வந்த இளைஞர்கள்தானாம் அந்த ரசிகர்கள் உடனே அங்கு கட்டை , துப்பாக்கி என அதிரடியாக வந்தவர்கள் நக்மாவை ஏன் புகைப்படம் கொடுக்கவில்லை என சீண்டியிருக்கின்றனர்.
View this post on Instagram
ஷங்கரின் வேறு முகம் :
அதுவரையில் அமைதியாக இருந்த ஷங்கர் , ஆத்திரத்தில் அந்த இளைஞர்களை அறைந்திருக்கிறார். உடனே அந்த இளைஞர்கள் நடித்து வந்த படக்குழுவினருக்கும் காதலன் படக்குழுவினருக்கும் வாக்குவாதம் முற்றி , அடிதடியில் முடிந்திருக்கிறது. இரு படக்குழுவும் பயங்கரமாக சண்டையிட்டிருக்கின்றனர். இதையெல்லாம் படத்தில் மட்டுமே பார்த்த எனக்கு நேரில் பார்த்தது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. மேலும் எப்போதும் அமைதியாகவே இருக்கும் ஷங்கரின் வேறு முகத்தை அன்றுதான் பார்த்தேன் என்கிறார் நக்மா .