இளம் நடிகைகளை மனமாரப் புகழ்ந்த மீனா: வைரலாகும் ஃப்ளாஷ்பேக் பேட்டி
நடிகை மீனா தனது திருமணத்திற்குப் பின்னர் அளித்த பேட்டியொன்று தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

நடிகை மீனா தனது திருமணத்திற்குப் பின்னர் அளித்த பேட்டியொன்று தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. பலரும் இவரை கண்ணழகி என்றழைத்தனர். ரஜினி, கமல் உள்ளிட்ட டாப் ஸ்டார்களுடன் நடித்தவர். ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடிந்திருந்தார்.
கணவர் மறைவால் வாடும் மீனா:
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூருவைச் சேர்ந்தவர் ஆவார். மீனாவுக்கும் வித்யாசாகருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். நைனிகா, தெறி திரைப்படத்தில் தளபதி விஜய்-ன் மகளாக நடித்து அசத்தியிருந்தார். பலரும் நைனிகாவின் நடிப்பை பாராட்டினர்.
சுட்டிக் குழந்தையாக, மழலை ததும்ப தன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் நைனிகா. தெறி படம் செம்ம ஹிட். குட்டி நைனிகாவின் நடிப்பிற்காகவே தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது என்றே சொல்லலாம்.
கடந்த மார்ச் மாதம் இறுதியில் கொரோனா பாதிப்பால் வித்தியாசாகரின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. அதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் மற்றும் இதயம் ஏற்கெனவே செயலிழந்து விட்டது. எனவே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டு சில வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உறுப்புகள் கிடைக்காமல் போகவே, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய இயலவில்லை.
எக்மோ கருவியில் உயிர் வாழ்ந்து வந்த அவர் உடலின் பிற உறுப்புகளும் ஒவ்வொன்றாக செயலிழந்து போக சிகிச்சை பலனின்றி அண்மையில் உயிரிழந்தார். வித்தியாசாகரின் மரணத்தை அடுத்து ரஜினிகாந்த் உட்பட பல்வேறு திரைப்பிரபலங்களும் மீனாவின் கணவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
வைரலாகும் பேட்டி:
இந்நிலையில் அவரது பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசியிருப்பதாவது:
திருமணத்திற்கு பின்னர் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்போதான் திருமணம் ஆன மாதிரி இருந்தது. நைனிகா பிறந்துவிட்டார். கணவர், குழந்தை குடும்பம் என வாழ்க்கை இனிமையாக செல்கிறது. இன்றைக்கு இருக்கு இளம் நடிகைகள் எல்லாம் ரொம்பவே டேலன்ட்டடாக இருக்கிறார்கள். நான் நடித்துக் கொண்டிருந்தபோது என் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோதுதான் த்ரிஷா நடிக்க வந்தார். அவர் இன்று வரை கதாநாயகியாக இருக்கிறார் என்றால் அவரின் திறமை தான் காரணம். த்ரிஷா, அசின், ஸ்ரேயா, ஹன்சிகா மோத்வானி என எல்லோருமே பெஸ்ட் நடிகைகள் தான். நாங்கள் எல்லாம் சினிமாவுக்கு வந்து நடிப்பு கற்றுக் கொண்டோம். ஆனால் இப்போதைய ஹீரோயின்கள் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டு நடிக்க வருகிறார்கள்.
இவ்வாறு மீனா கூறியிருக்கிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

