Actress Meena : என்னைப் போன்றவர்களின் குழந்தைகளைப் பற்றி யோசியுங்கள்..இரண்டாவது திருமணம் பற்றி நடிகை மீனா
நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில் நடிகை மீனா விளக்கமளித்துள்ளார்
இரண்டாவது திருமணம் பற்றி தற்போது தனக்கு எந்த சிந்தனையும் இல்லை என்று நடிகை மீனா தெரிவித்துள்ளர்.
மீனா
’நெஞ்சங்கள்' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. ஆனால் இவர் அனைவரின் கவனத்தையும் ஒ ஈர்த்தது நடிகர் ரஜினிகாந்த் கெளரவ வேடத்தில் நடித்த 'அன்புள்ள ரஜினிகாந்த்' திரைப்படம். அன்று தூக்கி வைத்து கொண்டாடிய நடிகர் ரஜினிக்கே, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்பு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையானவர் மீனா.
ரஜினி , கமல், அஜித் , சூர்யா என தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடன் திரையில் தோன்றியுள்ளார். தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிகளில் கமர்ஷியல் மற்றும் எதார்த்தமான படங்களில் அசத்திய மீனா நடிப்பைத் தவிர்த்து ரியாலிட்டி ஷோவில் நடுவராகவும் இருந்து வருகிறார். மீனாவின் மகள் நைனிகா அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போகிறாரா மீனா ?
நடிகை மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த சாஃப்ட்வேர் இஞ்சினியர் வித்யாசாகரை திருமணம் செய்துகொண்டார். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை நடத்தி வந்த அவரது வாழ்க்கையில் எதிர்பாராத நிகழ்வு ஏற்பட்டது.
கடந்த 2022 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவால் மீனாவின் கணவர் வித்யாசாகர் காலமானார். இதனைத் தொடர்ந்து தனது மகளுடன் மீனா வசித்து வருகிறார். இப்படியான நிலையில் நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக நீண்ட நாட்களாக தகவல்கள் வெளியாகியபடியே இருந்தன. ஏற்கனவே இது தொடர்பாக விளக்கமளித்த போதும் இந்த வதந்திகளுக்கு முடிவு இல்லை. தற்போது தனது இரண்டாவது திருமணம் தொடர்பான வதந்திகளுக்கு திட்டவட்டமாக விளக்கத்தை அளித்துள்ளார் நடிகை மீனா.
என்னைப் போல் தனியாக இருப்பவர்களைப் பற்றி யோசித்து பேசுங்கள்
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மீனா தனது இரண்டாம் திருமணம் தொடர்பான வதந்திகள் குறித்து இப்படி பேசினார் “சமூக வலைதளங்களில் உண்மையை சொல்லுங்கள். அதுதான் நல்லது. நாட்டில் என்னைப்போல் தனிமையில் வாழும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களின் பெற்றோர் மற்றும் குழந்தைகளைப் பற்றி கொஞ்சம் சிந்தித்து பேசுங்கள். தற்போது இரண்டாம் திருமணம் பற்றி எனக்கு எந்த சிந்தனையும் இல்லை. எதிர்காலத்தில் எடுக்கப்போகும் முடிவு பற்றி இப்போது எப்படி சொல்ல முடியும் . எனவே இரண்டாம் திருமணம் பற்றி வெளியாகும் வதந்திகளை யாரும் கண்டு கொள்ள வேண்டாம்” என்றார்
மேலும் படிக்க ; Sivakarthikeyan : ரமணா படப்பிடிப்புத் தளத்தில் சிவகார்த்திகேயன்...23 ஆண்டுகள் கழித்து நினைவுகளைப் பகிர்ந்த முருகதாஸ்