![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Sivakarthikeyan : ரமணா படப்பிடிப்புத் தளத்தில் சிவகார்த்திகேயன்...23 ஆண்டுகள் கழித்து நினைவுகளைப் பகிர்ந்த முருகதாஸ்
23 ஆண்டுகளுக்குப் பிறகு ரமணா படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்கு சென்று நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் இயக்குநர் முருகதாஸ்
![Sivakarthikeyan : ரமணா படப்பிடிப்புத் தளத்தில் சிவகார்த்திகேயன்...23 ஆண்டுகள் கழித்து நினைவுகளைப் பகிர்ந்த முருகதாஸ் sivakarthikeyan sk 23 shoot continues in murugadoss ramana movie location Sivakarthikeyan : ரமணா படப்பிடிப்புத் தளத்தில் சிவகார்த்திகேயன்...23 ஆண்டுகள் கழித்து நினைவுகளைப் பகிர்ந்த முருகதாஸ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/25/5111059166894d1edf706dfe7eec44e91711343597052572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ரமணா படம் எடுக்கப்பட்ட அதே தளத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
ஏ ஆர் முருகதாஸ்
அஜித் குமார் நடித்த தீனா படத்தின் மூலம் தமிழ் சினிமவில் அறிமுகமானவர் இயக்குநர் முருகதாஸ். தொடர்ந்து சூர்யாவுடன் கஜினி, 7 ஆம் அறிவு, விஜய்யுடன் துப்பாக்கி , கத்தி உள்ளிட்ட ப்ளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்துள்ளார். இப்படங்கள் தவிர்த்து அவர் இயக்கிய ஸ்பைடர் , ரஜினிகாந்த் நடித்த தர்பார் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. சில வருட கால இடைவெளிக்குப் பிறது தற்போது மீண்டும் ஒரு சூப்பரான ஸ்கிரிப்ட் உடன் களத்தில் இறங்கியுள்ளார் முருகதாஸ்.
எஸ்.கே 23
சிவகார்த்திகேயனின் 23-ஆவது படத்தை தற்போது இயக்கி வருகிறார் முருகதாஸ். இப்படத்தில் கன்னட நடிகை ருக்மினி வசந்த் கதாநாயகியாக நடிக்கும் நிலையில் அனிருத் இசையமைக்கிறார். ஸ்ரீலகஷ்மி மூவிஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.மலையாளத்தில் சக்கைப்போடு போட்ட அய்யப்பனும் கோஷியும் படத்தின் ஒளிப்பதிவாளர் சுதீப் எலமன் மற்றும் தேசிய விருது பெற்ற எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் இந்த படத்தில் பணியாற்றுகின்றனர்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள இடங்களில் நடைபெற்று வருகிறது. இப்படியான நிலையில் ஏ.ஆர் முருகதாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
முருகதாஸ் இயக்கத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் நடித்து கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான படம் ரமணா. 23 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று சிவகார்த்திகேயன் படத்தின் ஒரு காட்சியை எடுத்து வருகிறார் முருகதாஸ். இதனைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த பதிவில் அவர் மிஸ் யூ கேப்டன் என்கிற ஹேஷ்டேக் பதிவிட்டுள்ளார்.
அமரன்
இதனைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ள நிலையில், சாய் பல்லவி இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
மேலும் படிக்க : Kamal Haasan: சீனியர் பிரபுதேவா சுந்தரம் மாஸ்டருடன் ஒற்றைக் கால் ஸ்டெப்.. கமல்ஹாசன் நெகிழ்ச்சி!
Sivakarthikeyan: என் இன்ஸ்பிரேஷன்.. நடிகர் சிவகார்த்திகேயனை புகழ்ந்து தள்ளிய பிரபல தெலுங்கு நடிகை!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)