என்னம்மா இப்படி பண்றீங்களேமா...விருது விழாவில் விடுபட்டு போன லட்சுமி ராமகிருஷ்ணன் பெயர்!
அவரது பெயர் விருதுக்கான பட்டியலை அறிவிக்கும் போது இடம் பெறவில்லை. இதனால் அதிருப்தியடைந்த லட்சுமி ராமகிருஷ்ணன், அங்கிருந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேள்வியெழுப்பினார்.
தமிழக அரசின் திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனின் பெயர் விடுபட்டு போனதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ் சினிமாவின் மறுபக்கங்களாக இருந்த திரைக்கலைஞர்களே பின்னாளில் தமிழகத்தில் ஆட்சி அரியணையில் அமர்ந்தனர். இதனால் தமிழ் சினிமாவும் ஆட்சியாளர்களும் பிரிக்க முடியாத உறவை இன்றளவும் கொண்டுள்ளனர். ஆரம்பகாலத்தில் சினிமா கலைஞர்களுக்கும், தொலைக்காட்சி வந்த பின்னர் சின்னத்திரை கலைஞர்களுக்கும் தமிழ்நாடு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த விருதுகள் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படவில்லை. அதற்கான காரணத்தையும் தமிழக அரசு தெரிவிக்கவில்லை.
View this post on Instagram
கிட்டத்தட்ட 13 ஆண்டு காலமாக கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கப்படாமல் இருந்த நிலையில் இந்த விருதுகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் பணியானது கடந்த 2015 ஆம் ஆண்டு துவங்கியது. அதன்படி கடந்த 2017 ஆம் ஆண்டு 2009 ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான ஆண்டுகளில் வெளியான திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரைகளுக்கும் அதன் கலைஞர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் விருதுகள் வழங்கும் விழா நடைபெறவில்லை.
அதிமுகவின் இறுதிகாலக்கட்டத்தில் கலைமாமணி விருதுகள் மட்டும் வழங்கப்பட்டது. அதன்பின் தேர்தல் தொடர்பான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த விருது வழங்கும் விழா நடைபெறமலேயே இருந்தது. இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று ஒரு வருடம் முடிவுற்ற நிலையில் தமிழ்நாடு அரசு அந்த விழாவை நேற்று கலைவாணர் அரங்கத்தில் நடத்தி விருதுகள் வழங்கி கலைஞர்களை விருது வழங்கி கௌரவப்படுத்தியது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா பாபு ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.
இதற்கிடையில் 2011 ஆம் ஆண்டுக்கான விருது பட்டியலில் உச்சிதனை முகர்ந்தால் படத்தில் நடித்ததற்காக சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருது பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான விழாவுக்கு வருகை தந்திருந்த அவரது பெயர் விருதுக்கான பட்டியலை அறிவிக்கும் போது இடம் பெறவில்லை. இதனால் அதிருப்தியடைந்த லட்சுமி ராமகிருஷ்ணன், அங்கிருந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேள்வியெழுப்பினார்.
Recieved the prestigious #TamilnaduStateAward , thanking @CMOTamilnadu , jury members & organisers. My name was missed out along with a few others , it was little disappointing at that point but organising team quickly found the missing names, we were called on dias soon after, pic.twitter.com/QjerYF9kiP
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) September 4, 2022
இதன்பின் தவறு நடந்ததை உணர்ந்த அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் லட்சுமி ராமகிருஷ்ணன் உட்பட பட்டியலில் விடுபட்ட பெயர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு விருது வழங்கி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மதிப்புமிக்க தமிழ்நாடு அரசின் மாநில விருது கிடைத்தது. முதலமைச்சர்,நடுவர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கு நன்றி. இன்னும் சிலருடன் எனது பெயர் விடுபட்டது. அந்த நேரத்தில் அது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. ஆனால் நிகழ்ச்சி ஒழுங்கிணைப்பாளர்கள் குழு காணாமல் போன பெயர்களை விரைவாகக் கண்டுபிடித்தது என தெரிவித்துள்ளார்.