Esther Anil: பாபநாசம் நடிகையா இது? வைரலாகும் எஸ்தரின் போட்டோஸ்! பெங்களூரு க்ளிக்ஸ்!
கவர்ச்சியான போட்டோஷூட்களை அவ்வப்போது நடத்தி இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். அவருக்கென இன்ஸ்டாவில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
மலையாளத் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய எஸ்தர் அனில். கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான ‘பாபநாசம்’ படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக நடித்து தமிழ் மக்களின் மனதைக் கொள்ளையடித்தவர். இதற்கு முன்பு மலையாளத்தில் மோகன் லால் நடித்த ‘த்ரிஷ்யம்’ படத்தில் அதே கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது 20 வயதை கடந்துவிட்ட எஸ்தர், ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சியான போட்டோஷூட்களை அவ்வப்போது நடத்தி இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். அவருக்கென இன்ஸ்டாவில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
அவ்வப்போது அவர் பதிவிடும் போட்டோக்கள் சோஷியல் மீடியா வைரலாவது வழக்கம். அப்படியாக இன்று எஸ்தர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் ஹிட் அடித்துள்ளது. பெங்களூரில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு கமெண்ட் செய்துள்ள அவரது ரசிகர்கள் க்யூட்டாக இருப்பதாகவும், எஸ்தர் மெலிந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
View this post on Instagram
தற்போது ஒரு சில மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் எஸ்தர். இதற்கிடையே படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் எஸ்தர் அனில்.
View this post on Instagram