”நிறைய Bad comments; இயக்குநர் சொன்னா எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன்“ - திவ்ய பாரதி ஓபன் டாக்!
"சீரியல்ல நடிக்க விருப்பம் இல்லை . ஏன்னா ஒரே மாதிரியான கேரக்டரில் ஒரு வருடம் முழுக்க நடிக்க வேண்டும்."
கோலிவுட் சினிமாவில் முதல் சினிமாவிலேயே அதிக கவனம் ஈர்த்த நடிகை திவ்யபாரதி. சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் திவ்ய பாரதிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அவ்வபோது தனது சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இந்த நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ஐடி ஊழியராக இருந்த அவர் எப்படி தமிழ் சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுத்தார் என்பது குறித்து பகிர்ந்திருக்கிறார்.
View this post on Instagram
அதில் “ஆக்டிங்கிற்கும் எனக்கும் சுத்தமா சம்பந்தமே கிடையாது. சின்ன ஃபோட்டோவிற்கு கூட நிற்க மாட்டேன். ஒரு தனிப்பட்ட காரணத்திற்காக சென்னை வந்தேன். இங்கு வந்த பொழுதுதான் மாடலிங்கில் களமிறங்கினேன். அப்போதே எனக்கு நிறைய படங்களில் நடிக்க அழைப்பு வந்தது. ஆனால் எனக்கு அது செட் ஆகுமா என யோசித்து தயங்கினேன். அப்போ அம்மாதான் என்னிடம் நீ என்னதான் பண்ணுற ஐடியால இருக்கே அப்படினு கேட்டாங்க. சீரியல்ல நடிக்க விருப்பம் இல்லை . ஏன்னா ஒரே மாதிரியான கேரக்டரில் ஒரு வருடம் முழுக்க நடிக்க வேண்டும். நான் தொடந்து மாடலிங் செய்துக்கொண்டிருந்த சமயத்தில்தான் பேச்சிலர் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. முதல் படத்திலேயே எனக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சிதான். எனக்கு மேக்கப் போட சுத்தமா பிடிக்காது.
View this post on Instagram
பாக்குறவங்க என்னை ரொம்ப சீன் போடுறதா நினைப்பாங்க. பேச்சிலர் படம் வெளியாகுறதுக்கு முன்னதாகவே என்னுடைய போஸ்டர் பார்த்துட்டு நிறைய பேர் தகாத கமெண்ஸ் பண்ணியிருக்காங்க . அதுமாதிரியெல்லாம் முன்கூட்டியே கணிக்கக்கூடாது. படத்துல சில நடிகைகள் சில விஷயங்களை செய்ய தயங்குவாங்க. ஆனால் எனக்கு அப்படி கிடையாது. கதைக்கு தேவை இருக்கு அப்படினா நான் எது வேண்டுமானாலும் செய்வேன். ஏன்னா நாம அப்படி செய்ய மறுக்குறது இயக்குநர்களுடைய கிரியேட்டிவிட்டியை தடுப்பது போல.அதுவும் நடிப்புதானே..இயக்குநர்கள் சொல்வதைத்தான் செய்ய வேண்டும். எனக்கு வெற்றி மாறன் சார் படத்துல நடிக்க ஆசை. தமிழ் ஹீரோயின்ஸ் நிறைய பேர் நடிக்க வரனும்.” என நடிகை திவ்யபாரதி தெரிவித்துள்ளார்.