Athulya Ravi : நடிகை அதுல்யா ரவி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா? குழப்பத்தில் ரசிகர்கள்…
நடிகை அதுல்யா ரவின் சமீபத்திய புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பாரா என்று சந்தேகிக்கிறார்கள்!
தமிழில் வெளிவந்த காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. அதற்குப்பின்பு சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ஏமாளி படத்தில் நடித்திருந்தார்.
View this post on Instagram
Also Read | Prakash Raj : நீங்கள் ஒன்றும் தானம் செய்யவில்லை; மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சாடிய பிரகாஷ்ராஜ்
இதனை தொடர்ந்து சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2 உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
View this post on Instagram
பிளாஸ்டிக் சர்ஜரி சர்ச்சை :
சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் வெளியிட்ட படங்கள் அவரது தோற்றத்தில் மாற்றத்தைக் காட்டின. இதனால் அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கலாம் என ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர். அவரது கமண்ட் செக்ஷனில் ரசிகர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா என்று கேள்விகளால் நிரம்பியுள்ளது.
View this post on Instagram
இந்நிலையில் பல வதந்திகளுக்குப் பிறகு, தனது பெற்றோர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்க மாட்டார்கள் என்று சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். செல்ஃப் கேர் மற்றும் தீவிர உடற்பயிற்சி காரணமாக தனது முகம் வெகுவாக மாறியதாக அவர் கூறியுள்ளார்.