''கெட்ட வார்த்தை பேசி செலெக்ட் ஆன ஹீரோயின் நான்தான்'' - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் அப்!
எனக்கு ஒரே தயக்கமா போச்சு , உடனே பக்கத்தில் இருந்த கேமரா மேன் செந்தில் , பண்ணுங்கன்னு சொல்லி சைகை காட்டுறாரு.
![''கெட்ட வார்த்தை பேசி செலெக்ட் ஆன ஹீரோயின் நான்தான்'' - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் அப்! actress aishwarya rajesh open up about vada chennai audition ''கெட்ட வார்த்தை பேசி செலெக்ட் ஆன ஹீரோயின் நான்தான்'' - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் அப்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/17/4ab9eb4a18417019e6d46eb79f8257a71660710510791224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் , தெலுங்கு , இந்தி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொகுப்பாளராக மீடியாவிற்குள் நுழைந்த ஐஸ்வர்யா ராஜேஷ் பல அவமானங்கள் மற்றும் கடின உழைப்பை கடந்துதான் இன்று ஹீரோயின் என்னும் அந்தஸ்தை பெற்றிருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் , தனுஷ் நடிப்பில் கடந்த 2028 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் வடசென்னை. இந்த படத்தில் ஐஸ்வர்யாவின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. குறைந்த காட்சிகளில் வந்து போனாலும் , தனது கதாபாத்திரத்தை அழுத்தமாகவே பதிவு செய்திருப்பார்.ஐஸ்வர்யா ரஜேஷ் சமீபத்திய நேர்காணலில் , வட சென்னை படத்தில் தான் நடிக்க எப்படி ஒப்பந்தமானேன் என்பது குறித்து பகிர்ந்திருந்தார்.
View this post on Instagram
கெட்ட வார்த்தையில் ஆடிஷன் :
அதில் “வட சென்னை படத்துல முதல்ல சமந்தா , அமலா பால்தான் இயக்குநர் வெற்றிமாறன் லிஸ்ட்ல வச்சுருந்தாரு. நான் ஆடிஷன் போனப்போ எனக்கு ஹேர் ஸ்டைல் எல்லாம் மாற்றி மாற்றி ஃபோட்டோ எடுத்தாரு. அதன் பிறகு என்னை கூப்பிட்டு ,இதுதான் கடைசி ஆடிஷன் ஐஸ்வர்யா. நீங்க உங்களுக்கு என்ன மாதிரியான கெட்ட வார்த்தை தெரியுமோ , படு மோசமான வார்த்தைகள் எதுவோ அதையெல்லாம் சொல்லி திட்டுங்கன்னு சொன்னாரு. எனக்கு ஒரே தயக்கமா போச்சு , உடனே பக்கத்தில் இருந்த கேமரா மேன் செந்தில் , பண்ணுங்கன்னு சொல்லி சைகை காட்டுறாரு. அதன் பிறகு திரும்பி கெட்ட வார்த்தையாலேயே வச்சு செஞ்சுட்டேன். உடனே வெற்றி சார் அந்த இடத்தை விட்டு போயிட்டாரு. ”
படம் ரிலீஸ் ஆன பிறகு பயந்தேன் :
“நான் பின்னாலேயே போயிட்டு என்ன சார் ஆச்சு , ஓக்கேயா என கேட்டேன். உடனே வெற்றி சார் என்ன பத்மா எப்போ ஷூட்டிங் போகலாம் அப்படினு கேட்டாரு. நீதான் படத்துல ஹீரோயின்னு சொல்லிட்டாரு. இந்த உலகத்துலேயே கெட்ட வார்த்தை பேசி செலெக்ட் ஆன ஹீரோயின் நானாகத்தான் இருப்பேன். தனுஷ் மாதிரியான பெரிய ஹீரோவை கெட்ட வார்த்தையில திட்டும் பொழுது நான் பயந்தேன். படம் 5 மணி ஷோ ரிலீஸ் ஆகுது , என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் call பண்ணுறாங்க. தியேட்டர்ல நான் கெட்ட வார்த்தை பேசி நடிச்ச சீனுக்கு செம ரெஸ்பான்ஸுனு சொன்னதும் எனக்கு நிம்மதியாச்சு .” என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)