சூரிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அதிதி... கமெண்ட்டில் வந்து கலாய்க்கும் ரசிகர்கள்!
அதிதியின் வாழ்த்து சூரிக்கு... ஆனால், சம்மந்தமே இல்லாமல், சிலர் அந்த பதிவில் வந்து அதிதியை கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர்.
காமெடி நடிகர் சூரியின் பிறந்தநாள் இன்று. இதற்காக, அவர் நடித்த விருமன் படத்தின் ஹீரோயினும், இயக்குனர் சங்கரின் மகளுமான அதிதி, வாழ்த்து செய்தி ஒன்றை பதிவிட்டிருந்தார். தனது ட்விட்டர் பக்கத்தில், ‛ஹேப்பி ஃபர்த் டே சார்....’ என்று அந்த வாழ்த்தில் தெரிவித்திருந்தார் அதிதி.
Happy birthdayyyyyy @sooriofficial saaaaarrrrr💯✨💯✨💯 pic.twitter.com/4QpESD2Kn2
— Aditi Shankar (@AditiShankarofl) August 27, 2022
அதில் சார் என்கிற வார்த்தையை, கொஞ்சம் அழுத்தமாக பதிவு செய்திருந்தார். அத்தோடு, விருமன் படப்பிடிப்பு தளத்தில் சூரியுடன் எடுக்கப்பட்ட போட்டோவையும் அவர் பதிவு செய்திருந்தார். இருவருமே படப்பிடிப்பு ஆடையில் இருக்கும் அந்த போட்டோவில் கார் மீது அமர்ந்திருக்கும் அதிதி, குளிர் தாங்க முடியாமல், மேலே ஜர்கின் அணிந்திருப்பதை பார்க்க முடிகிறது.
Sunday anaiku Sanda Podalam Monday anaiku manda poda mudiyuma
— Kirthick 👑🇮🇳 (@AK_Kirthick) August 27, 2022
Mam inoru Joke Solunga ✨
இதுவரை எந்த பிரச்னையும் இல்லை. அதிதியின் வாழ்த்து சூரிக்கு... ஆனால், சம்மந்தமே இல்லாமல், சிலர் அந்த பதிவில் வந்து அதிதியை கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, அதிதியின் பாடலை கிண்டல் செய்து, பலரும் தங்கள் பதிவை போட்டு வருகின்றனர். இன்னும் சிலர், சூரியும்-அதிதியும் ஒரே மாதிரி தான் என்பதைப் போன்ற கிண்டலையும் பதிவு செய்து வருகின்றனர்.
😬😬😤😤 cringe pic.twitter.com/5FqOKLDrUL
— wajith.sm (@sm_wajith) August 27, 2022
ஒரு வாழ்த்து செய்தியில், பலரும் உடன் சேர்ந்து வாழ்த்துவதை தான் பார்த்திருப்போம். இங்கு சம்மந்தமே இல்லாமல் வாழ்த்து அனுப்பியவரை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். விருமன் படப்பிடிப்பு தளத்தில் அதிதி கலகலப்பாக இருந்தார் என்று ஏற்கனவே பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், சூரியும் அதை வழிமொழிந்திருந்தார். இந்நிலையில் தான், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்திருந்தார் அதிதி.
— Lavyyy Boiiii 🪐 (@Lavyyboi) August 27, 2022
இப்போ புரியுது நீ ஏன் இப்டி மொக்க Joke பண்ணிட்டு சுத்துற னு
— VijayAlif🕶️𝕁𝕕🥃 (@VijayAlif5) August 27, 2022
ஒரு ஜோக் சொல்லிட்டு போங்க தங்கம் 🤗🤗🤗🤗
— Tamil Vijay (@TamilVi62703422) August 27, 2022