Vignesh shivan: நயனாக மாறிய ஆர்த்தி: புகழ்ந்து தள்ளிய விக்னேஷ் சிவன்!
பிரபல காமெடி நடிகை ஆர்த்தியை இயக்குநர் விக்னேஷ் சிவன் புகழ்ந்து பேசி இருக்கிறார்.
பிரபல காமெடி நடிகை ஆர்த்தியை இயக்குநர் விக்னேஷ் சிவன் புகழ்ந்து பேசி இருக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஆர்த்தி, கிரி, படிக்காதவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். திரைப்பட வாய்ப்புகள் குறையவே, கடந்த 2017 ஆம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் லைம் லைட்டுக்கு வந்தார்.
முன்னதாக, கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் கணேஷ்கரை திருமணம் செய்து கொண்ட ஆர்த்தி, தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், நயன்தாரா தனது கல்யாண ஆடையில் இருக்கும் புகைப்படத்தையும், தான் அதே போன்ற ஆடையில் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு, எதிர்பார்ப்பு இப்படி இருக்கையில் நடைமுறை இப்படித்தான் இருக்கிறது, ‘என்ன ஒரு கொடுமை’ என்று குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தார். இந்தப்பதிவை பார்த்த இயக்குநர் விக்னேஷ் சிவன், ‘ஆர்த்தி நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்’ என்று பதிவிட்டு இருக்கிறார்.
You are more beautiful dear Harathi ☺️☺️😍😍❤️❤️❤️🥰🥰🥰💐💐💐💐💐 https://t.co/VIieOSn6H4
— Vignesh Shivan (@VigneshShivN) August 12, 2022
தமிழ் சினிமாவில் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வந்த நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ்சிவன் திருமணம் கடந்த 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் குடும்பத்தினர்கள், நெருங்கிய நண்பர்கள், முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றனர்.
திருப்பதியில் நடக்கவிருந்த திருமணம், சென்னை மாமல்லபுரத்துக்கு மாற்றபட்டது. திருமணம் முடிந்த கையோடு இந்த ஜோடி திருப்பதி சென்று நேற்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இருவரும் ஹனிமூனுக்காக தாய்லாந்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுவந்தார்.
தாய்லாந்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்திருந்தார் விக்னேஷ் சிவன், அது சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. ஹனிமூனில் இருந்து வந்த கையுடன் விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாடை இயக்கும் வேலைக்கு சென்ற நிலையில், நயன்தாரா ஜவான் பட ஷூட்டிங்கிற்கு மும்பை சென்றார்.
View this post on Instagram
இந்நிலையில் விக்கி நயன் ஜோடி மீண்டும் வெகேஷனை கொண்டாட பார்சிலோனா சென்றுள்ளனர். இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு அவர்களின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
நயன்தாரா விக்கி ஜோடியின் திருமணம் நெட்ஃபிளிக்ஸில் 'நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரிடேல்’ என்ற பெயரில் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியாக உள்ளது. சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸில் இதுகுறித்த அப்டேட்டை வெளியிட்டு இருந்தனர்.