Hotspot 2 :படம் நல்ல இல்லனா செருப்பால அடிங்க...ஹாட்ஸ்பாட் 2 ஆம் பாகத்தை வழங்கும் நடிகர் விஷ்ணு விஷால்
கடந்த மார்ச் மாதம் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பிய ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் இப்படத்தினை நடிகர் விஷ்ணு விஷால் வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
ஹாட்ஸ்பாட்
திட்டம் இரண்டு மற்றும் கடந்த ஆண்டு ஜி.வி பிரகாஷின் அடியே ஆகிய படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் (Vignesh Karthik) அடுத்தபடியாக இயக்கிய படம் ஹாட்ஸ்பாட் (Hotspot). இப்படத்தில் கெளரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், சாண்டி மாஸ்டர், ஜனனி ஐயர், அம்மு அபிராமி, கலையரசன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். சதீஷ் ரகுநாதன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த மார்ச் 29 ஆம் தேதி வெளியான இப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு முக்கிய காரணம் படத்தைக் காட்டிலும் படத்தின் டிரைலரே. ரசிகர்களை கவர் வேண்டும் என்பதற்கான இந்த டிரைலரில் அடல்ட் காமெடிகள் சேர்த்து படத்தின் டிரைலரை வெளியிட்டு இருந்தார்கள்
இதனால் இப்படத்திற்கு திரையரங்கில் போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களே வெளியாகின. மேலும் இந்தப் படத்தை மக்கள் திரையரங்கிற்கு வந்து பார்க்கும் படியும் அப்படி படம் நன்றாக இல்லாவிட்டால் தன்னை செருப்பால் அடிக்கும்படி இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தெரிவித்திருந்தார். திரையரங்கத்தைத் தொடர்ந்து ஓடிடியில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஹாட்ஸ்பாட் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது
ஹாட்ஸ்பாட் 2 படத்தை வழங்கும் விஷ்ணு விஷால்
Aarambikalaama!!
— Vishnu Vishal Studioz (@VVStudioz) August 9, 2024
Let’s double up the Sambavam😎. @VVStudioz takes vera level pleasure to present this CONTROVERSIAL KAAVIYAM #HotSpot2Much#2much_ah_povoma@TheVishnuVishal @vikikarthick88 @KJB_Talkies @KJB_iambala #Sevenwarrior @DuraiKv@Pro_Velu @decoffl#VishnuVishal #VV pic.twitter.com/0iZpQNZzZ3
ஹாட்ஸ்பாட் 2 படத்தின் அறிவிப்பை சிறப்பு வீடியோ ஒன்றில் மூலம் வெளியிட்டுள்ளது படக்குழு. கே.ஜே.பி டாக்கீஸ் , செவன் வாரியர்ஸ் ஃபிலிம்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கும் நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் இப்படத்தை தனது பேனரில் வெளியிடுகிறார். மேலும் சமீபத்தில் வெளியாகிய கமலின் இந்தியன் 2 படத்தை கலாய்க்கும் வகையில் “ செகண்ட் பார்ட் பரிதாபங்கள் தான் உங்களுக்கு தெரியுமே படம் நன்றாக இல்லை என்றால் மக்கள் செருப்பால் அடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் “ என்று விஷ்ணு விஷால் இந்த வீடியோவில் பேசியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் படிக்க : Watch Video: செருப்பால அடிப்பேன்! ரஜினியை கடுமையாக கண்டித்த பாலச்சந்தர்... அன்னையோட எல்லாம் முடிந்தது...