Mufasa : The Lion King: திரையை முழுமையாக ஆட்கொள்ள வருகிறான் முஃபாஸா! கவனத்தை ஈர்க்கும் தி லயன் கிங் படத்தின் டிரைலர்!
Mufasa : The Lion King : முஃபாசா தி லயன் கிங் படத்தின் முதல் டிரைலர் வெளியாகியதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது
தி லயன் கிங் (The Lion King)
1994-ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி வெளியிட்ட அனிமேஷன் படம் ’தி லயன் கிங்’ . காட்டின் ராஜாவான முஃபாஸா என்கிற சிங்கம் தனக்கு அடுத்தபடியாக தனது மகன் சிம்பா காட்டை ஆளும் பொறுப்பை ஒப்படைக்க இருக்கிறார். ஆனால் முஃபாஸாவின் சகோதரனான ஸ்கார் சூழ்ச்சி செய்து முஃபாஸாவை கொலை செய்து சிம்பாவை காட்டை விட்டு விரட்டியடிக்கிறார். காட்டிற்கு செல்லும் சிம்பா டிமோன் மற்றும் பும்பா ஆகிய இரு நண்பர்களை கண்டறிகிறான். தனது நண்பர்களின் உதவியோடு தனது தந்தையை கொலை செய்த தனது சித்தப்பாவை வீழ்த்திவிட்டு மீண்டும் காட்டிற்கு ராஜாவாவதே தி லயன் கிங் படத்தின் கதை.
உலகம் முழுவதும் பிரபலமாகி கவனமீர்த்த இந்தப் படத்தை 2019-ஆம் ஆண்டு மீண்டும் ஒரு முறை நவீன் தொழில்நுட்பங்களின் பயனோடு வெளியிட்டது வால்ட் டிஸ்னி. தி ஜங்கிள் புக் படத்தில் பயன்படுத்தப் பட்டதைப்போல் வர்ச்சுவல் ரியாலிட்டி தொழில் நுட்பங்களின் பயன்பாட்டோடு சிறப்பான கிராஃபிக்ஸ் காட்சிகளோடு உருவானது இந்த படம். தற்போது தி லயன் கிங் படத்தின் முந்தைய பாகமாக உருவாகி இருக்கும் படமே முஃபாஸா : தி லயன் கிங்.
Experience the epic story of how an orphan became a King. #Mufasa: The Lion King, only in theaters December 20. pic.twitter.com/gpneur3Nwt
— Walt Disney Studios (@DisneyStudios) August 10, 2024
முந்தைய இரண்டு படங்களில் நாம் பார்த்தது குழந்தையாக விரட்டியடிக்கப்பட்ட சிம்பா மீண்டும் காட்டிற்கு அரசன் ஆன கதையைத்தான். இந்த படத்தில் நாம் பார்க்க இருப்பது சிம்பாவின் தந்தையான முஃபாஸா காட்டிற்கு ராஜாவான கதை. முந்தைய இரண்டு படங்களில் முதல் இரண்டு காட்சிகளில் முஃபாஸா இறந்துவிடுவார். முஃபாஸா இளமையில் எப்படி இருந்தார் என்பதை காட்டும் படமாக முஃபாஸா : தி லயன் கிங்க் படம் இருக்கும். முதல் பாகத்தில் தனது சகோதரனை மலையில் இருந்து தள்ளிவிடும் ஸ்கார் மற்றும் முஃபாஸா சிறு வயதில் உயிருக்கு உயிரான சகோதரர்களாக இருந்ததை மையப் படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது. தனது ஹாலிவுட்டில் மூன் லைட் , இஃப் பீயல் ஸ்ட்ரீட் குட் டாக் உள்ளிட்ட படங்களை இயக்கிய பாரி ஜென்கின்ஸ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் . லைவ் ஆக்ஷன் அதாவது நிஜக் காட்சிகள் மற்றும் ஃபோட்டோ ரியல் செயற்கை நுண்ணறிவு ரீதியில் உருவாக்கப்பட்ட காட்சிகள் என இரண்டு தொழில்நுட்பங்களும் பயன்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.
வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது