மேலும் அறிய

Watch Video: செருப்பால அடிப்பேன்! ரஜினியை கடுமையாக கண்டித்த பாலச்சந்தர்... அன்னையோட எல்லாம் முடிந்தது...

Watch Video : நடிகர் ரஜினிகாந்த் தண்ணி அடிச்சுட்டு ஷூட்டிங் ஸ்பாட் வந்த போது இயக்குநர் சிகரம் என்ன சொன்னார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக அன்று முதல் இன்று வரை சிலாகித்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அந்த இடத்தை அவர் அடைய கடந்த வந்த பாதை மிகவும் கரடு முரடானது. பேருந்து நடத்துனராக இருந்து நடிப்பின் மீது இருந்த தீராத காதலால் பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்து பயிற்சி எடுத்துக்கொண்டார். 1975ம் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'அபூர்வ ராகங்கள்' படத்தின் மூலம் அறிமுகமானார். தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்தி வைத்த இயக்குநர் சிகரம் மீது இன்று வரை அந்த குரு பக்தி இருக்கிறது. அவருக்கு கே. பாலச்சந்தர் மீது எந்த அளவுக்கு மரியாதை, பக்தி உள்ளது என்பதை அவரின் பிளாஷ்பேக் வீடியோ மூலம் வெளிப்படுகிறது. 

Watch Video: செருப்பால அடிப்பேன்! ரஜினியை கடுமையாக கண்டித்த பாலச்சந்தர்... அன்னையோட எல்லாம் முடிந்தது...

80ஸ் காலகட்டத்தில் உச்சபட்ச நடிகராக ஜொலித்து வந்த ரஜினிகாந்த்  மிகவும் ஜாலியான இளைஞராக வாழ்க்கையை ஆட்டம் பாட்டம் என என்ஜாய் செய்து வந்தார். அதோடு சேர்ந்து குடி, சிகரெட் பழக்கமும் இருந்தது. ஒரு முறை கே. பாலச்சந்தர் படம் ஒன்றில் ரஜினிகாந்த் நடித்து வந்த போது நடைபெற்ற சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து இருந்தார் ரஜினிகாந்த். அதில் அவர் பேசுகையில் "ஒரு நாள் இரவு 8 மணி இருக்கும் ஷூட்டிங் முடிஞ்சுடுச்சு, பேக் அப் சொல்லிட்டாங்க. அதனால போய்ட்டு குளிச்சுட்டு கொஞ்சம் மது அருந்திட்டு  உட்கார்ந்தேன். அப்போ எனக்கு அழைப்பு வருது. சார் உங்களை உடனே கூப்பிடுறாரு. ஒரு ஷாட் மிஸ் ஆயிடுச்சு அது தெரியாம பேக் அப் பண்ணிட்டோம். நீங்க உடனே வரணும் சார் அப்படினு சொல்றாங்க. நான் அப்படியே ஆடிப் போயிட்டேன். தண்ணி போட்டு இருக்கேனே. என்ன பண்றதுனு தெரியாம திரும்பவும் போய் பிரஷ் பண்ணிட்டு, குளிச்சுட்டு ஸ்ப்ரே எல்லாம் அடிச்சுட்டு ஷாட் நடக்குற இடத்துக்கு மேக் அப் போட்டுட்டு போய் நிக்குறேன். பாலச்சந்தர் சார் கிட்ட போக கூடாதுனு ட்ரை பண்றேன் ஆனா அவருக்கு உண்மை தெரிஞ்சிருச்சு. அப்படியே ஆடிப்போய் உட்கார்ந்துட்டேன். ஆனா பாலச்சந்தர் சார் ஒண்ணுமே சொல்லல. 

என்னை ரூமுக்கு வர சொன்னாரு. நாகேஷ் தெரியுமா உனக்கு அப்படினு கேட்டாரு. தெரியும்னு சொன்னேன். எவ்வளவு பெரிய நடிகன் தெரியுமா? அவன் முன்னாடி நீ ஒரு இரும்புக்கு கூட சமம் இல்ல. தண்ணி போட்டு அவன் வாழ்க்கையை அவனே கெடுத்துகிட்டான். இனிமே ஷூட்டிங்ல தண்ணி போட்டதை பார்த்தேன், கேட்டேன் 'செருப்பாலேயே அடிப்பேன்' அப்படினு சொன்னாரு. 

தண்ணி அடிப்பதை அன்னிக்கு நான் விட்டது தான். காஷ்மீர், ஜம்மு அங்க எங்க என எங்க இருந்தாலும் எவ்வளவு குளிர் இருந்தாலும் மேக் அப்பில் இருக்கும் போது ஒரு சொட்டு தண்ணி கூட அடிக்கமாட்டேன்.  

தலைப்பு செய்திகள்

திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!

வீடியோ

அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்
Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
Embed widget