Actor Vishal : வேகமாக வந்த சிவப்பு கார்.. தாக்குதலுக்குள்ளான விஷாலின் வீடு.. நடந்தது என்ன?
நடிகர் விஷாலின் அண்ணாநகர் வீட்டில் திங்கள்கிழமை இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர் எனும் அதிர்ச்சியான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
விஷால் வீட்டில் தாக்குதல்:
நடிகர் விஷால் தனது பெற்றோருடன் சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்கள். திங்கள்கிழமை இரவு நடிகர் விஷால் வீட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர் எனும் அதிர்ச்சியான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தீவிரமாக நடைபெறும் விசாரணை :
நடிகர் விஷாலின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் நடிகர் விஷால் வீட்டின் சிசிடிவி கேமராவின் காட்சிகளின் படி தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் ஒரு சிவப்பு காரில் வந்திருப்பது பதிவாகியுள்ளது. இந்த புகாரை ஏற்று கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து தகுந்த விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணையின் முடிவில் இந்த மர்ம நபர்கள் குறித்த விவரமும் தாக்குதலுக்கான காரணமும் தெரிய வரும்.
Happy Birthday to the #CaptainGangster of #MarkAntony @adhikravi
— Vishal (@VishalKOfficial) September 17, 2022
Wishing the Young Director & Actor a great year ahead #HBDAdhik pic.twitter.com/hHDp57CCYu
அடுத்த ஆக்ஷன் படம் முடிந்தது :
நடிகர் விஷால் தற்போது தனது அடுத்த ஆக்ஷன் படமான "லத்தி" படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் விஷால் ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்சன் மிகவும் மும்மரமாக நடையிற்று வருகிறது. படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் "மார்க் ஆண்டனி" திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்.ஜே. சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விஷால் நடிப்பில் இதற்கு முன்னர் வெளியான எனிமி, வீரமே வாகை சூட வா, ஆக்ஷன் உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை என்பதால் ஏமாற்றத்தில் இருந்த விஷால் ரசிகர்களுக்கு சமீபத்தில் வெளியான ’லத்தி’ படத்தின் டீசர் வரவேற்பை பெற்றது.
Team #Laththi wishes everyone a happy #VinayagarChathurthi.#GanapatiBappaMorya #GaneshChaturthi#LaththiCharge pic.twitter.com/BshUOupoOF
— Vishal (@VishalKOfficial) August 31, 2022
மேலும் துப்பறிவாளன் படத்தின் முதல் பாகம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து படத்தின் அடுத்த பாகம் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.