மேலும் அறிய

Actor Vishal: ‘லட்சுமி மேனனை கல்யாணம் பண்ணப்போறேனா?’ : கடுப்பான விஷால்.. சோகத்தில் ரசிகர்கள்..

நடிகை லட்சுமி மேனனுடன் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதுகுறித்து நடிகர் விஷால் விளக்கம் கொடுத்துள்ளார். 

நடிகை லட்சுமி மேனனுடன் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதுகுறித்து நடிகர் விஷால் விளக்கம் கொடுத்துள்ளார். 

புரட்சி தளபதி விஷால்

பிரபல சினிமா தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் இளைய மகனான விஷால், 2004 ஆம் ஆண்டு வெளியான ‘செல்லமே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து திமிரு, சண்டகோழி, தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்யம், தோரணை,தீராத விளையாட்டு பிள்ளை, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், பாயும் புலி, துப்பறிவாளன்,அயோக்யா, வீரமே வாகை சூடும் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். 

இப்படியான நிலையில் விஷால் முன்னதாக நடிகை வரலட்சுமி சரத்குமாரை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப்போவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இருவருமே அதனை மறுத்தனர். தொடர்ந்து அனிஷா என்ற பெண்ணுடன் விஷாலுக்கு நிச்சயதார்த்தம் ஆனது. ஆனால் அந்த நிகழ்வு திருமண பந்ததுக்கு செல்லாமல் நடுவிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நின்று போனது. 

அதேசமயம் நடிகர் சங்கம் கட்டடம் கட்டிய பிறகு அந்த கட்டடத்தில் தான் தன்னுடைய திருமணம் நடைபெறும் என தெரிவித்திருந்தார்.45 வயதாகும் விஷால் எப்போது திருமணம் செய்வார் என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் எழுந்து வருகிறது. 

லட்சுமி மேனனுடன் திருமண தகவல் 

இப்படியான நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை லட்சுமி மேனனுடன் விஷாலுக்கு திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இதனால் ரசிகர்களும், கோலிவுட் திரையுலகைச் சேர்ந்தவர்களும் ஆச்சரியப்பட்டனர். 

ஏற்கனவே பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் ஆகிய இருபடங்களிலும் விஷால் - லட்சுமி மேனன் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். இதனால் இவர்களுக்குள் நல்ல புரிதல் இருக்கும், அதனால் திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்துள்ளார்களா? என பலரும் கேள்வி எழுப்பினர். இப்படியான நிலையில் வதந்திகளுக்கு நடிகர் விஷால் விளக்கம் கொடுத்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

விஷால் விளக்கம்

அதில், “பொதுவாக என்னைப் பற்றிய எந்தப் பொய்யான செய்திகளுக்கும் அல்லது வதந்திகளுக்கும் நான் பதிலளிப்பதில்லை, அது பயனற்றது என்று நான் உணர்கிறேன். ஆனால் இப்போது லட்சுமி மேனனுடனான எனது திருமணம் பற்றிய வதந்தி பரவி வருவதால், நான் இதை மறுக்கிறேன், இது முற்றிலும் ஆதாரமற்றது.

இந்த வதந்திக்கு நான் பதிலளிக்க காரணம், ஒரு நடிகை என்பதை விட ஒரு பெண் இதில் சம்பந்தப்படுத்தப்படுகிறார் என்பது தான். நீங்கள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையில் நுழைந்து அவரின் பிரைவசி மற்றும் இமேஜைக் கெடுக்கிறீர்கள். நான் யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்பதை ஆண்டு, தேதி, நேரம் மற்றும் எதிர்காலத்தில்  டிகோட் செய்ய இது ஒன்றும் பெர்முடா டிரையாங்கிள் (Bermuda Triangle) அல்ல. நம்பிக்கை உணர்வு மேலோங்கும் நேரம் வரும்போது எனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்” என தெரிவித்துள்ளார். மீண்டும் விஷாலின் திருமண செய்தி உறுதியாகாதது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மோடி அரசிடம் பணிந்த தேர்தல் ஆணையம்" கொதித்தெழுந்த தமிழக முதல்வர் ஸ்டாலின்!
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
TRB Raja:
"சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்Surmount Logistics Rewards | ஊழியர்களுக்கு பைக், கார் பரிசுகெத்து காட்டும் நிறுவனம்  அட நம்ம சென்னையில பா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மோடி அரசிடம் பணிந்த தேர்தல் ஆணையம்" கொதித்தெழுந்த தமிழக முதல்வர் ஸ்டாலின்!
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
TRB Raja:
"சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
Breaking News LIVE: திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சித்ததால்  பரபரப்பு
Breaking News LIVE: திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங், இன்று முதல் தேர்வு செய்யலாம்  - உச்சநீதிமன்றம் அதிரடி
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங், இன்று முதல் தேர்வு செய்யலாம் - உச்சநீதிமன்றம் அதிரடி
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Embed widget