Vishal About Marriage : "லவ் மேரேஜா..? அர்ரேஞ்ச் மேரேஜா..?" விஷால் என்ன சொன்னார் தெரியுமா..?
பிரபல நடிகர் விஷால் சென்னையில் 11 ஏழை ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்தார்.
தமிழ் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் விஷால், திரையுலகில் சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடித்த பல திரைப்படங்கள் ஹிட் அடித்து, வசூல் வேட்டையிலும் களம் கண்டது. இவர் நடித்த திமிரு, சண்டக்கோழி ஆகிய தமிழ் படங்கள் ரசிகர்களை விட்டு நீங்கா இடம் பிடித்துள்ளன. இந்நிலையில், இவருக்கென்று, தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இலவச திருமணம்:
இவர், அவ்வப்போது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று, பல்வேறு பேட்டிகளில் கூறியிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். பின்னர், அவரின் மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தலில் போட்டியிடவில்லை. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று பொதுச் செயலாளராக விஷால் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது சென்னையில் உள்ள மாதவரத்தில் 11 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்தார். அப்போது இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மூன்று மதங்களின் வழிமுறைப்படி இறைவனை வணங்கி, திருமணத்தை நடத்தி வைத்தார்.
இத்திருமணத்தில், மணமக்களுக்கு 51 வகையான சீர்வரிசை பொருட்களும் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சியை விசாலின் பெற்றோர், குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
We are conducting a #Marriage event with the presence & blessings of #ActorVishal for 11 underprivileged couples with 51 Seervarisai (Gift Rituals)
— Vishal Film Factory (@VffVishal) November 5, 2022
Venue : Ervin School, Madhavaram
Time : 9 to 12 PM
Regards,
Harikrishnan V
Manager - Actor Vishal#VishalMakkalNalaIyakkam pic.twitter.com/jjSVkzWSfy
”காதல் திருமணம்”
பின்னர் செய்தியாளர்களை விஷால் சந்தித்தார், அப்போது திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு நடிகர் சங்கம் கட்டிடம், கூடிய விரைவில் கட்டி முடிக்கப்படும் எனவும் அதற்கு பிறகு திருமணம் நடக்கும் எனவும் தெரிவித்தார். உங்களது திருமணம் காதல் திருமணமா? அல்லது பெற்றோர்கள் பார்த்து ஏற்பாடு செய்யும் திருமணமா? என்ற கேள்விக்கு, காதல் திருமணம் என விஷால் தெரிவித்தார்.
இந்நிலையில், இலவச திருமணம் நடத்தி வைத்ததற்கு, பலரும் பாரட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.