அமலா பாலை ரூமுக்கு வரச்சொன்ன நபர்.. வெளுத்து வாங்கிய சம்பவம்! நடிகர் சொன்ன சீக்ரெட்!
நடிகை அமலா பாலை ரூமுக்கு அழைத்த புரோகிராம் மேனேஜர் பற்றி நடிகர் விஷால் சமீபத்தில் கூறி இருந்தார். அதன் பின்னணி என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை அமலா பால். ஒரு கட்டத்தில் மார்க்கெட் இல்லாமல் சினிமாவிலிருந்து விலகினார். பின்னர் 2-ஆவது திருமணம் செய்து கொண்டு இப்போது ஒரு குழந்தைக்கு தாயாகவும் மாறியுள்ளார் இவரை பற்றி விஷால் கடந்த ஆண்டு கூறிய தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அது பற்றி பார்ப்போம்.
'நீலதாமர' என்ற படம் மூலமாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அமலா பால். வீர சேகரன் என்ற தமிழ் படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் அறிமுகமானார். இந்தப் படம் பெரிதாக பேசப்படாத நிலையில், சிந்து சமவெளி வெளியாகி இவருக்கு சர்ச்சை நாயகி என பெயரை பெற்று தந்தது.

இந்தப் படம் நெகட்டிவ் இமேஜ் கிரியேட் பண்ணவே, இவர் நடித்து முடித்து ரிலீசுக்கு தயாராக இருந்த மைனா படத்தின் புரமோஷனுக்கு கூட யாரும் இவரை அழைக்கவில்லை. இந்த தகவலை அவரே கூறி இருந்தார்.
ஆனால் மைனா திரைப்படம் அமலாபாலின் இமேஜை ஒட்டுமொத்தமாக மாற்றியது. இதே போல் தான் தெய்வ திருமகள் படமும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுக்க அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க துவங்கினார். விஜய், ஆர்யா, அதர்வா, ரவி மோகன், தனுஷ், விஷ்ணு விஷால் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்தார்.
சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது, இயக்குநர் ஏ எல் விஜய்யை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பின்னர் அமலா பால் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார். ஆனால், போதுமான வாய்ப்புகள் இல்லாத நிலையில் சினிமாவிலிருந்து விலகினார். இந்த நிலையில் தான் அமலா பாலை படுக்கைக்கு அழைத்த மேனேஜர் பற்றி வெளிப்படையாக கூறி இருக்கிறார் நடிகர் விஷால்.

இது குறித்து அவர் தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் கூறும் போது: மலேசியாவில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு அமலா பால் சென்றிருந்தார். அந்த நிகழ்ச்சியின் மேனேஜர் ஒருவர் நைட் டின்னர் சாப்பிட தனது ரூமுக்கு வரும்படி அழைத்தார். இதனால் ஆத்திரமடைந்த அமலா பால், அந்த மேனேஜரை அடி வெளுத்துவிட்டார். அதன் பிறகு எனக்கு போன் போட்டு அமலா பால் எல்லாவற்றையும் கூற, நான் கார்த்தியிடம் கூறி அந்த மேனேஜரை போலீசில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்தோம். இப்படி யாரேனும் உங்களிடம் கேட்கும் போது நீங்கள் துணிச்சலோடு அவரை செருப்பால் அடிக்க வேண்டும் என கடந்த ஆண்டு மலையாள திரையுலகில் அம்மா நடிகர் சங்க பிரச்சனை எழுந்த போது கூறி இருந்தார்.





















