Vikram New Car: கனவு காரை வாங்கிய சியான் விக்ரம்! ஆத்தாடி இத்தனை கோடியா? விலையை கேட்டாலே கிறுகிறுன்னு இருக்கே!
நடிகர் விக்ரம் ஆசை ஆசையாக ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்ட்ரே என்ற புதிய மாடல் காரை வாங்கியுள்ளார். இது பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விக்ரம். கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் ஏற்ப தனது உடல் எடையை கூட்டி குறைத்து நடிப்பதில் இவருக்கு நிகர் இவர் மட்டுமே. குறிப்பாக ஐ, அந்நியன், கோப்ரா, தங்கலான் போன்ற படங்களுக்காக கடுமையாக டயட் இருந்து உடல் எடையை ஏற்றி - குறைத்து நடித்தார்.
'வீர தீர சூரன்' வெற்றி:
அண்மை காலமாக இவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காமல் ஏமாற்றி வந்த நிலையில் இந்த ஆண்டு விக்ரமுக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது. அதாவது தங்கலான் படத்திற்கு பிறகு 'வீர தீர சூரன்' படத்தின் 2ஆம் பாகத்தில் நடித்தார். ஆனால், இந்த படம் விக்ரமுக்கு, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியை பெற்று கொடுத்தது.

இப்போது இந்தப் படத்தின் முதல் பாகத்தில் நடித்து வருகிறார். எப்போதும் தமிழ் சினிமாவில் முதல் பாகம் வெளியான பிறகு தான் அந்த படத்தின் 2ஆம் பாகம் வெளியாகும். ஆனால், விக்ரம் மட்டுமே முதல் முறையாக தனது படத்தின் 2ஆம் பாகத்தை வெளியிட்டு இப்போது முதல் பாகத்தில் நடித்து வருகிறார்.
விக்ரம் வாங்கிய புதிய கார்:
இந்த நிலையில் தான் விக்ரம் புதிதாக ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்ட்ரே மாடல் கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த காரின் மதிப்பு மட்டும் ரூ.8 கோடியாம். இந்த காரை இவர் வாங்க வேண்டும் என்பது இவரது கனவாக இருந்த நிலையில் அது தற்போது நிறைவேறி உள்ளது. பொதுவாக சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்களுக்கு கார் மற்றும் பை மீது தனிப்பட்ட பிரியம் இருக்கும். அதிலேயும் சொகுசு கார்கள் என்றால் சொல்லவே வேணாம். உடனே வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஒரு சில பிரபலங்கள் மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருக்கிறார்கள். விஜய் கூட தனது ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்றுவிட்டார். அந்த காருக்கு ஏன் அவ்வளவு டிமாண்டு என்றால் அந்த காரில் இருக்கும் லோகோவைத் தான் எல்லோருமே சொல்வார்கள்.
View this post on Instagram
தனுஷிடமும் ரோல்ஸ் ராய்ஸ் கார் இருக்கிறது. இப்போது விக்ரம் புதிதாக ரூ.8 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்ட்ரே என்ற மாடல் காரை வாங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





















