Actor Vikram Hospitalized: பரபரப்பு.. நடிகர் விக்ரமுக்கு திடீர் நெஞ்சுவலி எனத் தகவல்.. காவேரி மருத்துவமனையில் அனுமதி..
நடிகர் விக்ரம்(Vikram) உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் விக்ரம் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் விக்ரமுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், அவர் தற்போது சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
1966-ல் பரமக்குடியில் பிறந்த நடிகர் விக்ரம் 1990 என் காதல் கண்மணி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் நுழைந்தார். அதனைத்தொடர்ந்து நீண்ட காலமாக சினிமாவில் போராடி வந்த விக்ரமிற்கு பாலா இயக்கிய 'சேது' திரைப்படம் திருப்பு முனையாக அமைந்தது.
தொடர்ந்து கமர்ஷியல் பக்கம் திரும்பி விக்ரம், ஜெமினி, தூள், சாமி உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தினாலும், நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த காசி, சாமுராய், பிதாமகன் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். இதில் பிதாமகன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.
Also Read | Vikram Health LIVE: நடிகர் விக்ரமுக்கு திடீர் நெஞ்சுவலி.. காவேரி மருத்துவமனையில் அனுமதி!
தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்றஅந்ததஸ்தை பிடித்த அவருக்கு பிரபல இயக்குநரான ஷங்கர் இயக்கத்தில் அந்தியன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து மணிரத்னத்தின் ‘ராவணன்’, ஏ.எல்.விஜயின் ‘தெய்வ திருமகள்’ என நடிப்புக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடித்தார். இந்தப்படங்கள் விமர்சன ரீதியான வரவேற்பை கொடுத்தாலும், வணிக ரீதியான வெற்றியை கொடுக்க வில்லை.
அதனைத்தொடர்ந்து ‘இருமுகன்’ 10 எண்றதுக்குள்ள’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. இதனையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான் படத்தில் இணைந்தார். ஓடிடியில் வெளியான இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
View this post on Instagram
தற்போது அவர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.