Vijay Rolls Royce Case: ரோல்ஸ் ராய்ஸ் கார் கேஸில் விஜய்க்கு நாளை தீர்ப்பு...
விஜய்யின் மேல்முறையீட்டு மனுவுக்கு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணாவும், முகமது ஷஃபிக்கும் நாளை உத்தரவு பிறப்பிக்கவுள்ளனர்.
![Vijay Rolls Royce Case: ரோல்ஸ் ராய்ஸ் கார் கேஸில் விஜய்க்கு நாளை தீர்ப்பு... actor vijays Rolls Royce car case Judgment will be tomorrow Vijay Rolls Royce Case: ரோல்ஸ் ராய்ஸ் கார் கேஸில் விஜய்க்கு நாளை தீர்ப்பு...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/24/b31ff91371719e50add3109feb92935d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் விஜய். இவர் கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் ஒன்றை வாங்கியிருந்தார். அந்த காரை பயன்படுத்துவதில்லை என்பதால் அந்த காருக்கான நுழைவுவரியை ரத்து செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த வருடம் விசாரணைக்கு வந்த அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் நடிகர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மேலும், வரியை ரத்து செய்யக்கோரிய நடிகர் விஜய்க்கு ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்தார்.
தனி நீதிபதியின் தீர்ப்பில் அதிருப்தியடைந்த நடிகர் விஜய் அபராதத்தை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இதையடுத்து, கடந்த வருடம் ஆகஸ்ட் 27ஆம் தேதி நடிகர் விஜய்யின் மேல்முறையீட்டை விசாரித்த நீதிமன்றம், நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை விதித்தது.
அதேசமயம், நடிகர் விஜய் செலுத்த வேண்டிய காருக்கான வரியை ஒரு வாரத்தில் வணிகவரித்துறை கணக்கிட்டு சொல்ல வேண்டும் என்றும், மீதமுள்ள 80 சதவீத வரித்தொகையை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. மேலும், நடிகர் விஜய் மீதான தனி நீதிபதியின் விமர்சனத்தை நீக்குவது தொடர்பாக நான்கு வாரங்களுக்கு பிறகு விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தனர்.
ஏற்கனவே, நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியாக ரூபாய் 8 லட்சத்தை செலுத்தியிருந்தார். இந்த நிலையில், மீதமுள்ள ரூபாய் 32 லட்சம் தொகையையும் நடிகர் விஜய் தற்போது செலுத்தியுள்ளார்.
இதனால், ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரித்தொகையான மொத்தம் ரூபாய் 40 லட்சத்தையும் நடிகர் விஜய் செலுத்திவிட்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய்யின் மேல்முறையீட்டு மனுவுக்கு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணாவும், முகமது ஷஃபிக்கும் நாளை உத்தரவு பிறப்பிக்கவுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Mahaan OTT Release: களமிறங்கும் அப்பா - மகன்! முடிவுக்கு வந்த காத்திருப்பு.. ரிலீஸ் தேதியை அறிவித்த மகான்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)