(Source: ECI/ABP News/ABP Majha)
Vijay at Puneeth Rajkumar Memorial : கண்கலங்கிய விஜய்.. கற்பூர ஒளி காட்டி புனீத் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி.. (வீடியோ)
இறப்பதற்கு முன்பு புனீத் ராஜ்குமார் தனது இரண்டு கண்களை தானம் செய்தார். இறந்த பிறகு பெங்களூருவிலுள்ள நாராயண நேத்ராலயா கண் வங்கியில் சேமித்து வைக்கப்பட்டன.
மறைந்த பிரபல நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடிகர் விஜய் இன்று அவரது நினைவிடத்திற்கு சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று நடிகர் விஜய் புனீத் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு வந்து அவரது புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.
#ThalapathyVijay at #PuneethRajkumar memorial today. @actorvijaypic.twitter.com/yrDyWe5OrQ
— Actor Vijay Fans Page (@ActorVijayFP) February 26, 2022
முன்னதாக, நடிகர் புனீத் ராஜ்குமார் நினைவிடத்திற்கு வந்த நடிகர் சூர்யா அவரது புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும்போது கதறி அழுதார். மேலும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்ட சிலரும் புனீத் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா, “புனீத் ராஜ்குமார் மறைவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் நான்கு மாத குழந்தையாக எனது அம்மா வயிற்றில் இருக்கும்போது, புனீத் 7 மாத குழந்தைனு எங்க அம்மா அடிக்கடி சொல்வாங்க. அவரை மிஸ் செய்கிறோம்” என்று கூறினார்.
#JUSTIN | கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் நினைவிடத்தில் கண்ணீர் சிந்திய நடிகர் சூர்யா https://t.co/wupaoCQKa2 | #Suriya | #PuneethRajukumar | #karnataka | @Suriya_offl pic.twitter.com/u223RO5Neh
— ABP Nadu (@abpnadu) November 5, 2021
கன்னட திரையுலகில் பவர் ஸ்டார் என்றழைக்கப்படும் 46 வயதான புனீத் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அன்று காலை ஜிம்மில் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சில மணி நேரங்களில் உயிரிழந்தார். அவரது மறைவு ஒட்டுமொத்த கன்னட திரையுலகுக்கு மட்டுமல்லாமல் இந்தியா திரையுலகுக்கே அதிர்ச்சியை கொடுத்தது.
இறப்பதற்கு முன்பு புனீத் ராஜ்குமார் தனது இரண்டு கண்களை தானம் செய்தார். இறந்த பிறகு பெங்களூருவிலுள்ள நாராயண நேத்ராலயா கண் வங்கியில் சேமித்து வைக்கப்பட்டன. நவீன தொழில்நுட்பம் மூலம் 4 பாகங்களாகப் பிரிக்கப்பட்ட கண்கள், 4 பேருக்குப் பொருத்தப்பட்ட. அதன் மூலம் புனீத் ராஜ்குமாரால் 4 பேர் பார்வை பெற்றுள்ளனர்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்