திரைப்பயணம், குடும்பம் பற்றி மனம் திறக்கும் ’Dabba Cartel’ ஜோதிகா!
தென்னிந்திய சினிமாவின் நட்சத்திரம் ஜோதிகா. இப்போது, ஹிந்தியில் ’Dabba Cartel’ என்ற க்ரைம் வெப் சீரில் நடித்துள்ளார். இது பிப்ரவரி, 28-ம் தேதி வெளியாகிறது.
ஜோதிகாவிற்கு ரசிகர்கள் ஏராளாம். சூர்யாவை திருமணம் செய்த பிறகு, மகன், மகள் என குடும்பத்தினருக்கு நேரம் ஒதுக்கினார். அதன்பிறகு, 36 வயதினிலே, காதல் தி கோர் என அவருக்குப் பிடித்த கதைகளைத் தேடி நடித்து வருகிறார்.
சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்துள்ள ஜோதிகா, 28 வயத்தில் சினிமாவில் இருந்து ப்ரேக் எடுத்து மீண்டும் 36 வயதில் நடிக்க வந்திருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
வாழ்க்கையில் அவருடைய சாய்ஸ் குறித்து எந்த வருத்தமோ அல்லது சினிமாவில் படங்களை தவறவிட்டுவிட்டோமே என்ற கவலையெல்லாம் இல்லை என ஜோதிகா தெரிவித்துள்ளார்.
ஜோதிகா - சூர்யா இருவரும் க்யூக் தம்பதி என ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றனர்.
சூர்யா - ஜோதிகா இருவரும் ஸ்டார்கள் என்றாலும் வீட்டில் இருவரும் சாதாரண மனிதர்கள் என்று தெரிவித்துள்ளார். இருவரும் குழந்தைகள், குடும்பத்தினர் என இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் ஜோதிகா ஆக்டிவாக இருக்கிறார்.
ஜோதிகா தொடர்ந்து சுவாரஸ்யமான கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தெரிகிறது.
வாழ்த்துகள் ஜோதிகா...