மேலும் அறிய

திரைப்பட தொழிலாளர்கள் வீடு கட்ட விஜய் சேதுபதி நன்கொடை...ஒருத்தரே இத்தனை கோடி கொடுத்திருக்கார்

தென் இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சொந்தமாக வீடு கட்டிக் கொள்ள ரூ 1.30 கோடி ருபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி

ஃபெஃப்சி

திரைத்துறையில் பணியாற்றும் லைட் மேன் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர்களுக்கான தேவைகளை நிறைவேற்றும் சங்கம் ஃபெஃப்சி. பிரபல திரைப்பட இயக்குநர் ஆர்.கே செல்வமணி இதன் இயக்குனராக இருந்து வருகிறார். ஒவ்வொரு திரைப்படத்திற்கு பின்னும்  பல நூற்றுக் கணக்கான தொழிலாளிகளின் அயராத உழைப்பு இருக்கிறது. வெளியில் தெரியும் நட்சத்திரங்களைப் போல் இவர்களுக்கு பெரிய அடையாளமோ பெரிய சம்பளமோ இருப்பதில்லை. படப்பிடிப்புகளின் போது ஏற்படும் விபத்துகளில் பல லைமேன்கள் உயிரிழந்த சம்பவங்களையும் நாம் கேள்விப்பட்டு வருகிறோம்.

தொழிலாளர்களுக்கு 100 ஏக்கரில் நிலம்

திரைப்பட தொழிலாளர்கள் தங்களுக்கென சொந்தமாக வீடு கட்டிக் கொள்ளும் விதமாக தமிழ்நாடு அரசால் கடந்த 2006 - 2011 ஆட்சிகாலத்தில் அரசு சார்பாக 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் பையணூர் அருகே ஆயிரம் தொழிலாளர்கள் வீடு கட்டிக் கொள்ளும் விதமாக 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. மூன்று வருடங்களுக்கு உள்ளாக வீடு கட்டிக் கொள்ள வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் நிலம் திரும்ப பெறப்படும் என்றும் அரசு தெரிவித்திருந்தது. ஆட்சி மாற்றம் மேலும் பல காரணங்களால் தொழிலாளர்கள் அங்கு வீடு கட்டிகொள்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் கொடுக்கப்பட்ட நிலம் அரசால் திரும்ப பெறப்பட்டது. தமிழ்நாடு முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்றப் பின் தொழிலாளர்களுக்கு நிலம் திரும்ப தர வேண்டும் என ஃபெஃபசி சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. பல்வேறு ஆலோசனைக்குப் பின் கடந்த 21 ஆம் தேதி தொழிலாளர்களுக்கு மீண்டும் வீடு கட்ட அனுமதி வழங்கப்பட்டது. 

விஜய் சேதுபதி நன்கொடை

மூன்று வருட காலத்திற்குள் 1000 வீடுகளை கட்டி முடிக்க வேண்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பல தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் வசதி இல்லை. ஒரு வீடு கட்டுவதற்கு 2.20 லட்சம் தேவைப்படும் என்றும் இந்த வீடுகளை கட்டிமுடிக்க திரைப்பட நடிகர்கள் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி 1 கோடி 30 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார். ஒரு தொழிலாளிக்கு 50 ஆயிரம் வீதம் 250 தொழிலாளர்களுக்கு இந்த பணத்தை அவர் வழங்கியுள்ளார். விஜய் சேதுபதிக்கு ஃபெஃப்சி அமைப்பு நன்றி தெரிவித்தது மட்டுமில்லாமல் இந்த இடத்தில் கட்டப்போகும் ஆறு அடுக்குமாடி கட்டிங்களில் ஒரு கட்டிடத்திற்கு விஜய் சேதுபதி டவர்ஸ் என பெயர்  வைக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Embed widget