Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த ஒரு வாரமாக மீண்டும் உயர தொடங்கியுள்ளது. அந்த வகையில் நேற்றைய தினம் காலையில் உயர்ந்த தங்கத்தின் விலை மாலையில் குறைந்தது. இந்த நிலையில் இன்று காலை தங்கத்தின் விலையானது மீண்டும் உயர்ந்துள்ளது.

உயரும் தங்கம் விலை- காரணம் என்ன.?
தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு சவரனுக்கு மட்டும் சுமார் ஒரு லட்சம் ரூபாய் அளவிற்கு தங்கம் விலை அதிகரித்துள்ளது. 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 1.34 லட்சம் என்ற உச்சத்தை தொட்டு நகைப்பிரியர்களை தலை சுற்ற வைத்தது. இந்த நிலையில் ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு அதிகரித்ததால் விலையும் உயர தொடங்கியது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது தங்களது முதலீட்டை செலுத்தினர். இதனால் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அமெரிக்கா,ஈரான் போர்- தங்கம் விலை மாற்றம்
தற்போது அமெரிக்கா- ஈரான் இடையே போர் பதற்றம் குறைந்துள்ளதால் மீண்டும் தங்கம் விலையானது உயர தொடங்கியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சவரனுக்கு 7 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வானது அடுத்த சில வாரங்களுக்கு நீடிக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சரசரவென உயர்ந்த தங்கம் விலை
- ஆகஸ்ட் 7ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 150 ரூபாய் உயர்ந்து 13,900 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,200 ரூபாய் அதிகரித்து 1,11,200 ரூபாய்க்கு விற்பனை.
- ஆகஸ்ட் 8 ஆம் தேதி கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து 13,965 ரூபாய்க்கும், சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து 1,11,720 ரூபாய்க்கு விற்பனை.
- ஆகஸ்ட் 9ஆம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை
- ஆகஸ்ட் 10ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் குறைந்து 13,950 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 111,600 ரூபாய்க்கு விற்பனை.
- ஆகஸ்ட் 11 ஆம் தேதி காலையில் அதிகரித்த தங்கம் விலை, மாலையில் குறைந்தது. அந்த வகையில், ஒரு கிராம் 14,150 ரூபாய்க்கும், சவரன் 1,13,200 ரூபாய்க்கும் விற்பனை.
இன்றைய தங்கம் விலை
தங்கத்தின் விலையானது கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று காலை கிராமுக்கு 300 ரூபாய் உயர்ந்த நிலையில், மாலையில் கிராமுக்கு 100 ரூபாய் குறைந்துள்ளது. இந்த நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் உயர்ந்து 14,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 1,13,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரம் வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 260 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















