மேலும் அறிய

TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்

TVK Vs DMK Delimitation Resolution: திமுகவிற்கு செக் வைக்கும் விதமாக மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிராக, முதலமைச்சர் விஜய் இன்று சட்டப்பேரவையில் தனி தீர்மானம் தாக்கல் செய்கிறார்.

TVK Vs DMK Delimitation Resolution: முதலமைச்சர் விஜய் தலைமையிலான அனைத்துக்கட்சி எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டத்தை திமுக, அதிமுக புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தீர்மானம்:

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முன்பு வரை மத்தியில் ஆளும் பாஜகவை, திமுக கடுமையாக விமர்சித்து வந்தது. கடைசி நேரத்தில் கொண்டுவரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை வீழ்த்துவதில் முக்கிய பங்கு வகித்ததோடு, அதன் நகலை எரித்து  தீ பரவட்டும் என ஸ்டாலின் சூளுரைத்தார். ஆனால், தற்போது தேர்தலுக்கு பிறகு திமுக எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. மத்திய அரசு மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனை கடந்த முறை தீவிரமாக எதிர்த்து வந்த திமுக தற்போது, உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் மழுப்பலாக பேசி வருகிறது. இந்நிலையில் தான், திமுகவிற்கு செக் வைக்கும் விதமாக மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிராக, முதலமைச்சர் விஜய் இன்று சட்டப்பேரவையில் தனி தீர்மானம் தாக்கல் செய்கிறார்.

திமுகவிற்கு செக்..!

மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி திமுக தான் என்று அந்த கட்சியினர் தொடர்ந்து உரைத்து வருகின்றனர். அதேநேரம், தொகுதி மறுவரையறை மசோதா கொண்டுவரப்பட்டால் பாஜகவிற்கு சாதகமான நிலைப்பாட்டை முன்னெடுப்பது என திமுக பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், மத்திய அரசின் நட்பு கட்சியாக மாறி, மாநிலத்தில் தவெக அரசு குடைச்சல் கொடுக்கலாம் எனவும் திட்டமிடுகிறதாம். இதற்கு செக் வைக்கும் விதமாக தான், தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் அனைத்துக்கட்சி எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், திமுக கூட்டணி எம்பிக்கள் மற்றும் அதிமுக எம்பிக்கள் புறக்கணித்தனர். இதையடுத்து பாஜக ஆதரவு நிலைப்பாடு எடுத்ததால் தான், திமுக மற்றும் அதிமுக கூட்டத்தை புறக்கணித்ததாக விமர்சிக்கப்பட்டது. இந்த விவகாரத்தை இப்படியே விடாமல் திமுகவின் நிலைப்பாட்டை வெளியே கொண்டு வந்தே ஆக வேண்டும் என்ற உறுதியில் தான், இன்று தனித்தீர்மனம் ஒன்றை தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளது. 

எஸ்கேப் ஆகுறிங்களோ? - திமுகவிற்கு CM விஜய் ஸ்கெட்ச்

அண்மைக்காலமாக தொகுதி மறுவரையறை தொடர்பாகவும், பாஜகவுடன் கூட்டணியா என்பது குறித்தும் எழுப்பப்படும் கேள்விகளுக்கு, “மசோதா தாக்கல் செய்யப்பட்டால் படித்து விட்டு சொல்கிறோம், தமிழ்நாட்டிற்கு எது நல்லதோ அதையே செய்வோம், அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை” என்பது போன்ற பதில்களை திமுகவினர் வழங்கி வருகின்றனர். இதனால்,  ஆட்சியில் இருந்தவரை பாஜகவை காங்கிரசை விட தீவிரமாக எதிர்த்து வந்த திமுக, இன்று தங்களது சுயநலனுக்காக மத்திய அரசிடம் சரணடைய முடிவு செய்துவிட்டதாக தவெகவினர் கூறி வருகின்றனர். இந்த விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாட்டை பொதுமக்களை அறிய செய்ய வைக்க வேண்டும் என்பதற்காகவே இன்றைய தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதை ஆதரித்தாலும் சரி, எதிராக வாக்களித்தாலும் சரி இரண்டையும் தங்களுக்கான சாதகமாக மாற்ற தவெக திட்டமிட்ட்ய்ள்ளதாம்.

இதையும் படியுங்கள்: https://tamil.abplive.com/news/tamil-nadu/tamilnadu-rain-alert-chennai-weather-forecast-tn-today-meteorological-department-warning-august-12th-rain-alert-270864

தவெக அரசின் திட்டம் என்ன?

தீர்மானம் தாக்கல் செய்யப்பட்ட பிறகு ஒவ்வொரு கட்சியின் சார்பிலான பிரதிநிதிகளும் விவாதத்தில் பங்கேற்று தங்களது கருத்தினை தெரிவிப்பார்கள். பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் அந்த தீர்மானம் நிறைவேற்றப்படும். அந்த வகையில் தீர்மானத்திற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தால், மூன்றே மாதங்களில் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான நிலைப்பாட்டை மாற்றியது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். மாநில உரிமைகளுக்கான கட்சி என்ற விளம்பரம் எல்லாம் பொய்யா? என பொதுமக்களும் கேள்வி எழுப்பக்கூடும். ஒருவேளை தீர்மானத்திற்கு ஆதரவளித்தால், ஒட்டுமொத்த கட்சிகளையும் மாநில உரிமைகளுக்காக ஒருங்கிணைத்தவர் என முதலமைச்சர் விஜயை முன்னிலைப்படுத்த தவெக தயாராகி வருகிறது. அதோடு, பாஜகவின் கோபத்திற்கும் திமுக ஆளாகி, தமிழ்நாட்டில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் தீவிரமடையக்கூடும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழகத்தின் மாநில மரத்துக்கு இப்படியொரு திட்டமா? அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தின் மாநில மரத்துக்கு இப்படியொரு திட்டமா? அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
காட்டுத் தீ இனி எரியாது! ரூ.60 கோடியில் தமிழ்நாடு அரசின் மெகாமாஸ்டர் பிளான்! அமைச்சர் மாஸ் அறிவிப்பு!
காட்டுத் தீ இனி எரியாது! ரூ.60 கோடியில் தமிழ்நாடு அரசின் மெகா மாஸ்டர் பிளான்! மாஸ் அறிவிப்பு!
"திமுகவை ஓட ஓட விரட்டும் விஜய்! பாராட்டிவிட்டு திடீரென 'செக்' வைத்த தமிழிசை சௌந்தர்ராஜன்!"
Udhayanidhi Stalin : ‘வெளிநடப்பு செய்த திமுகவினர்’ உதயநிதிக்கு போன் போட்ட மு.க.ஸ்டாலின்..!
‘வெளிநடப்பு செய்த திமுகவினர்’ உதயநிதிக்கு போன் போட்ட மு.க.ஸ்டாலின்..!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Speech:
"ஃப்ராடு, கரூர் கேங், ABUSE" திமுகவை வெளுத்து வாங்கிய விஜய் - வேடிக்கை பார்த்த உதயநிதி ஸ்டாலின்
சென்னையில் நச்சுக்காற்றால் 4 ஆண்டுகள் ஆயுள் குறைகிறது: சௌமியா அன்புமணி அதிர்ச்சித் தகவல்!
சென்னையில் நச்சுக்காற்றால் 4 ஆண்டுகள் ஆயுள் குறைகிறது: சௌமியா அன்புமணி அதிர்ச்சித் தகவல்!
Udhayanidhi Stalin: ”கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்த CM விஜய்” கடுப்பாகி பேசிய உதயநிதி ஸ்டாலின்
கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்த CM விஜய்” கடுப்பாகி பேசிய உதயநிதி ஸ்டாலின்
அடிச்சா டபுள் செஞ்சுரி... பந்துக்கு செம Injury .. சேப்பாக்கத்தில் இடி இடியாய் இடித்த இஷான் கிஷன்!
அடிச்சா டபுள் செஞ்சுரி... பந்துக்கு செம Injury .. சேப்பாக்கத்தில் இடி இடியாய் இடித்த இஷான் கிஷன்!
ரூ. 6 லட்சத்தில் 5 ஸ்டார் பாதுகாப்பு! புது செடான் மாடலை களமிறக்கும் டாடா- என்னென்ன வசதிகள்?
ரூ. 6 லட்சத்தில் 5 ஸ்டார் பாதுகாப்பு! புது செடான் மாடலை களமிறக்கும் டாடா- என்னென்ன வசதிகள்?
டக்கர் மோடில் டாடா; EV, CNG வாகன விற்பனையில் இமாலய சாதனை! நாட்டின் Top Selling கார் இதுதான்!
டக்கர் மோடில் டாடா; EV, CNG வாகன விற்பனையில் இமாலய சாதனை! நாட்டின் Top Selling கார் இதுதான்!
2.50 லட்சம் ரூபாய் தள்ளுபடி... Bolero Neo முதல் Scorpio N வரை - Mahindra சூப்பர் ஆஃபர்!
2.50 லட்சம் ரூபாய் தள்ளுபடி... Bolero Neo முதல் Scorpio N வரை - Mahindra சூப்பர் ஆஃபர்!
CM Vijay: பேசி பழகிய பொய்.. வாங்கிப்பழகிய கை.. உங்களுக்கு அரசியல் தேவையா? - திமுகவை அலறவிட்ட விஜய்!
CM Vijay: பேசி பழகிய பொய்.. வாங்கிப்பழகிய கை.. உங்களுக்கு அரசியல் தேவையா? - திமுகவை அலறவிட்ட விஜய்!
Embed widget