Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாளில் அவர் முதன்முதலாக 500 யூனிட்டுக்குள் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். இதுதொடர்பாக நடிகை வைஷாலி மன்னிப்பு கேட்டுள்ளார்.

200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற தவெக அரசின் திட்டம் கடும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கும் நிலையில் சின்னத்திரை நடிகை விஷாலியை நெட்டிசன்கள் வெளுத்து வாங்கியுள்ளனர். இதனால் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
சர்ச்சைக்குள்ளான மின்சார கட்டணம்
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற நிலையில் 500 யூனிட்டுக்குள் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவிக்கப்பட்டது. 500 தாண்டி பயன்படுத்துபவர்களுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் மட்டுமே இலவசம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் விஜய் அரசு பொறுப்பேற்றப் பின் ஜூன், ஜூலை மாதங்களில் மின் கட்டணம் வழக்கத்தை காட்டிலும் இரு மடங்கு அதிகமாக வந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் சில இடங்களில் தவறு நடந்தது கண்டறியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மின் கட்டணம் கணக்கீடும் அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மன்னிப்பு கேட்ட நடிகை வைஷாலி
இந்த நிலையில் விஜய் டிவியில் முத்தழகு, மகாநதி, ராஜா ராணி ஆகிய சீரியல்களிலும், ஜீ தமிழ் சேனலில் கோகுலத்தில் சீதை மற்றும் நம்ம வீட்டு பொண்ணு ஆகியவற்றிலும் நடித்திருக்கிறார். மேலும் சர்க்கார், சீமராஜா, கடுகு, ராஜா மந்திரி ஆகிய படங்களில் நடித்தார். அதுமட்டுமல்லாமல் ரியாலிட்டி ஷோவான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துக் கொண்டார்.
இதனிடையே வைஷாலி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த 2,3 மாதங்களாக நம்முடைய சாமானிய மக்களுக்கு மின் கட்டணம் அதிகளவு வந்துக் கொண்டிருக்கிறது. எனக்கும் இதே நிலைமை தான். தவெக மின் கட்டணத்தில் 200 யூனிட் இலவசம் என சொன்ன மாதிரி நடைமுறையில் செயல்படுத்தப்படவில்லை. இப்படியே போனால் மக்களின் வாழ்வாதாரம் ரொம்பவே கஷ்டமாக போய் விடும். அதனால் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என சொன்னதை வாபஸ் பெற்று விட்டு இதற்கு முன்னால் மின் கட்டணம் எவ்வளவு வந்துச்சோ அதே மாதிரி மீண்டும் வழங்கினால் மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இப்படியே போனால் தவெக அரசு மீதான நம்பிக்கை ரொம்பவே குறைந்து விடும்” என தெரிவித்துள்ளார்.
உண்மையில் நடந்தது என்ன?
முன்னதாக விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாளில் அவர் முதன்முதலாக 500 யூனிட்டுக்குள் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். இந்த வீடியோவை பகிர்ந்திருந்த வைஷாலி, பார்த்தீங்களா எங்க அண்ணனோட முதல் கையெழுத்தே 200 யூனிட் இலவச மின்சாரம் தான். இப்ப இதுக்கு என்ன சொல்லப் போறீங்க?.. இனிமேல் உங்க வீட்டில் மின் கட்டணம் பிரச்னையே இருக்காது. இது வெறும் ஆரம்பம் தான். இனிமேல் தான் அதிரடி ஆரம்பிக்கப்போகுது. தமிழ்நாடே மாறப்போகுது. பார்த்துக்கிட்டே இருங்க என தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது மின் கட்டணம் அதிகமாக வந்ததால் இணையவாசிகள் வைஷாலியை வெளுத்து வாங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















