மேலும் அறிய

Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?

நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், இந்த வயதில் இப்படியெல்லாம் நாடகம் போடுவது வெட்கக்கேட்டானது. பணம் சம்பாதித்து, அமைதியான வாழ்க்கை வாழுங்கள் என தெரிவித்திருந்தார்.

பிரபல நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராமில் காட்டமாக பதிவிட்ட ஸ்டோரிக்கு பின்னால் நடிகை குட்டி பத்மினி அளித்த நேர்காணல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை

த்ரிஷா தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாவார். இவருக்கும் தமிழக முதலமைச்சர் விஜய்க்கும் இடையே உறவு இருப்பதாக கடந்த சில மாதங்களாவே பேசப்பட்டு வருகிறது. விஜய் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவகாரத்து மனுவில் பெயர் குறிப்பிடாமல் நடிகையுடன் உறவில் இருந்தார் என தெரிவித்திருந்தார். அது த்ரிஷா தான் என பலரும் கூறி வந்தார்கள். ஆனால் முதலமைச்சர் விஜய், த்ரிஷா ஆகிய இருவரின் தரப்பும் அதனை உறுதி செய்யவில்லை. அதேசமயம் இருவரும் ஒரு திருமண நிகழ்வில் ஒன்றாக கலந்துக் கொண்டார்கள். மேலும் விஜயின் பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் த்ரிஷா வருகை தந்தது போன்றவையும் நடந்தது. 

இன்ஸ்டாவில் காட்டமான பதிவு

இப்படியான நிலையில் தொடர்ச்சியாக அரசியல் விவகாரங்களில் முதலமைச்சர் விஜயை விமர்சிக்கிறோம் என்ற பெயரில் எதிர்க்கட்சி தலைவர்கள் நடிகை த்ரிஷாவையும் உள்ளே இழுத்து வருகின்றனர். அப்படியாக சமீபத்தில் த்ரிஷா பற்றி இரட்டை அர்த்தத்தில் பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். மேலும் நயினார் நாகேந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.பாரதி, ஆர்.பி.உதயகுமார் என பலரும் விஜய் விவகாரத்தில் த்ரிஷாவையும் இழுத்து பேசியது கண்டனத்தைப் பெற்றது. 

இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், இந்த வயதில் இப்படியெல்லாம் நாடகம் போடுவது வெட்கக்கேட்டானது. பணம் சம்பாதித்து, அமைதியான வாழ்க்கை வாழுங்கள் என த்ரிஷா தெரிவித்திருந்தார். அவர் யாரை சொல்கிறார் என புரியாமல் ரசிகர்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த விஷயத்தில் நடிகை குட்டி பத்மினி அளித்த நேர்காணல் தான் காரணம் என இணையத்தில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். 

குட்டி பத்மினி சொன்னது என்ன?

கடந்த 4 நாட்களுக்கு முன்னர் குட்டி பத்மினி அளித்த அந்த நேர்காணலை ஒளிபரப்பாகியுள்ளது.  அதில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி குடும்ப திருமண விழாவுக்கு விஜயும், த்ரிஷாவும் சேர்ந்தது வந்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, அர்ச்சனா கல்பாத்திக்கு இருவரும் நல்ல நண்பர்கள். அப்படியிருக்கும்போது இரண்டு பேர் சேர்ந்து வந்ததை நீங்கள் ஏன் தவறாக பார்க்கிறீர்கள். சமூகம் தவறாக பார்த்தால், அவர்களுக்கு பயந்து வாழ முடியுமா?.. விஜய் வெளிப்படையாகவே இந்த விஷயத்தில் இருந்தது எனக்கு மகிழ்ச்சி தான். நான் ஒரு மனிதன் தான். எனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்கிறேன் என நினைக்கிறார். முதலமைச்சராகி விட்டால் தனிப்பட்ட வாழ்க்கையே ஒருவருக்கு இல்லை என ஆகி விடுமா?

பெண்களுடைய அன்பு விஜய்க்கு இருக்கிறது. அது தேர்தல் முடிவுகளில் நன்றாகவே தெரிந்தது. அவர்கள் யாரும் விஜய் - த்ரிஷா உறவை தவறாக பார்க்கவில்லை. நாட்டுக்கு என்ன நடக்கிறது என பாருங்கள். அவர் கோட் சூட் போட்டாரு, வேட்டி கட்டினார் என ஏன் பார்க்கிறீர்கள் என புரியவில்லை என குட்டி பத்மினி தெரிவித்தார். 

இரண்டு பேரும் லவ் பண்ணாங்க

தொடர்ந்து பேசிய அவர், “இப்போது விஜய் - த்ரிஷா இடையே என்ன இருக்கிறது என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஒரு காலக்கட்டத்தில் விஜய், த்ரிஷா இடையே ரொம்ப நல்ல அன்பு இருந்தது. இரண்டு பேரும் மனதார நேசித்தார்கள். அது அவர்கள் இருவரும் அறிமுகமான கில்லி பட காலக்கட்டம். இந்த சம்பவம் எனக்கு நன்றாக தெரியும். ஆனால் விஜய்-த்ரிஷா விஷயத்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு எதிர்த்தார். அதனால் விஜய்க்கு சங்கீதாவை திருமணம் செய்து வைத்தார்.  இருவரின் வாழ்க்கை வேறு மாதிரி சென்று விட்டது. 

விஜய், சங்கீதா பிரிய த்ரிஷா தான் காரணம் என சொல்வதை என்னால் ஏற்க முடியாது. திரும்ப த்ரிஷா விஜயுடன் லியோ, கோட் படத்தில் நடித்தார். விஜய், சங்கீதா பிரிந்தே 5, 6 ஆண்டுகளாகி விட்டது. எனினும் த்ரிஷாவை ஏன் இழுக்கிறார்கள் என தெரியவில்லை. ஒரே மேடையில் விஜய், த்ரிஷா என இருவரும் சேர்ந்து போனதை தவறாக பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை என குட்டி பத்மினி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆர்.பி.உதயகுமார் சர்ச்சை பேச்சு

அதேசமயம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட வீடியோவில் தொடர்ந்து அரசு பதவியில் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டி  த்ரிஷா எப்போது துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என்பதைத் தமிழகம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என கேள்வி எழுப்பி விமர்சித்திருந்தார். ஒருவேளை இதனை த்ரிஷா குறிப்பிட்டு பேசுகிறாரா என தெரியாமல் தமிழ் திரையுலகம் குழம்பி போயிருக்கிறது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Embed widget