ஸ்டிக்கர் இல்லாத விஜய் பிறந்தநாள் விழா; கலக்கிய கரூர் மாவட்ட ரசிகர்கள்..!
ஸ்டிக்கர் இல்லாத நோட்டை பார்த்த மாணவர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். பள்ளியில் ஆசிரிய பெருமக்களும் ஸ்டிக்கர் இல்லாத நோட் புக்குக்கு வரவேற்பு தெரிவித்தனர்.

இளைய தளபதியாக திரையுலகில் அறிமுகமாகி தற்போது தளபதியாக மாறியுள்ள நடிகர் விஜயின் நாற்பத்தி எட்டாவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வால் போஸ்டர் , ஆலய வழிபாடு மற்றும் மாற்றுத் திறனாளிக்களுக்கு உதவி என பல்வேறு பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் கரூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் வி.பி. மதியழகன் தலைமையில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள், ஆலய வழிபாடு, அன்னதானம் தொடர்ந்து விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட குமரன் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கு இலவசமாக நோட்புக் மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியில் நோட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, அதனை நகர விஜய் மன்ற நிர்வாகிகள் சிறப்பாக செய்தனர்.

குறிப்பாக அரசியல் கட்சி முதல் ஆன்மீக இயக்கம் வரை தாங்கள் வழங்கும் பொருட்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி பொதுமக்களுக்கு வழங்கி வரும் நிலையில், விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக மாணவருக்கு வழங்கிய இலவச நோட்டில் எந்த ஒரு ஸ்டிக்கரும் ஒட்ட வில்லை. இந்த ஸ்டிக்கர் இல்லாத நோட்டை பார்த்த மாணவர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். பள்ளியில் ஆசிரிய பெருமக்களும் ஸ்டிக்கர் இல்லாத நோட் புக்குக்கு வரவேற்பு தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு தலா ஒரு நோட்டை வழங்கி இனிப்புகளையும் வழங்கி சிறப்பித்தனர். பின்னர், லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் இருந்த இருபதுக்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்களுக்கு காக்கி உடை, தையல் கூலி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். பின்னர் ராகவேந்திரா அறக்கட்டளைக்கு சென்ற விஜய் மாவட்ட நிர்வாகிகள் அங்கிருந்த மக்களிடையே விஜய் பிறந்தநாளை முன்னிட்டு உணவு அளித்து சிறப்பித்தனர். பின்னர் அரவக்குறிச்சி பகுதியில் நாற்பத்தி எட்டு கிலோ கேக் வெட்டி கொண்டாடிய விஜய் ரசிகர்கள், குளித்தலை உள்ளிட்ட பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஒரே நாளில் காலை, மதியம், இரவு என மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று உணவுகள், புத்தாடைகள், இனிப்புகள் வழங்கி சிறப்பித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்






















