Vijay Nelson Conversation: நம்புறமாதிரியான மூஞ்சிகளா இது.. விஜய்க்கு கால் அடித்த அனிருத்.. வெச்சு செய்த விஜய்..!
பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோவில் விஜய் என்ட்ரியாகி சர்ப்ரைஸ் கொடுத்த நிலையில், கலகலப்பாக விஜய் பேசிய உரையாடலை இங்கு பார்க்கலாம்.
விஜய் ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பு ‘பீஸ்ட் ’திரைப்படம்’.ஏற்கனவே படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளை வெளியிட்டு எதிர்பார்ப்பை எகிற வைத்த ‘பீஸ்ட்’ படக்குழு இன்று காலை படத்திலிருந்து அடுத்த அப்டேட் வெளியாகும் என அறிவித்தது. இதனால் இன்று காலையிலிருந்தே பீஸ்ட் படம் தொடர்பான ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் அதகளம் செய்து கொண்டிருந்தன. சரி, ஏற்கனவே படம் ரிலீஸ் ஆகும் மாதம் வெளியான நிலையில், இந்த அப்டேட்டில் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சர்ப்ரைஸாக படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியிடப்பட்டிருக்கிறது. டாக்டர் படத்தில் ‘செல்லமா செல்லமா’ பாடலுக்கு உருவாக்கிய ப்ரோமோஷன் ஸ்டேட்டர்ஜி வொர்க் அவுட் ஆன நிலையில், தற்போது வெளியிடப்பட்டிருக்கு அரபிக் குத்து பாடலின் ப்ரோமோஷனும் அதே பாணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. எதிர்பார்த்தது போலவே நடிகர் விஜய்க்கு சிவகார்த்திகேயன் பாட்டு எழுதியிருக்கிறார். பாடல் வருகிற 14-ஆம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக ப்ரோமோஷன் வீடியோ நடுவே விஜய் என்ட்ரி ஆகி பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய்க்கு ஃபோன் அடித்த அனிருத்
பாட்டுக்கான டியூனை முடித்த அனிருத், கருத்து கேட்பதற்காக விஜய்க்கு போன் செய்கிறார். ரிங்க் செல்கிறது....
சர்ப்ரைஸாக என்ட்ரி ஆன விஜய்
விஜய்: ஹோலோ..
அனிருத்: ஹாய் சார்..
விஜய்: ஹாய்ப்பா..
அனிருத்:- எப்படி இருக்கீங்க சார்
விஜய்: குட் குட் வாட்ஸ் வாட்ஸ் ஹேப்பனிங்..
அனிருத்: அந்த பீஸ்ட் ஃபர்ஸ்ட் சாங் ரெடி பண்ணிட்டோம் சார்..
விஜய்: ஃபர்ஸ்ட் பாட்டே இப்பத்தான் ரெடி பண்ணிருக்கீங்களா..சூப்பர்.. எப்படி வந்திருக்கு..?
அனிருத்: சார் நல்லா வந்திருக்கு..
நெல்சன்: சூப்பரா வந்திருக்கு
சிவகார்த்திகேயன்: சார் செமையா வந்திருக்கு
விஜய்: யாருப்பா அது மூனாவது..
நெல்சன்: அது சர்ப்ரைஸ் சார்.. இப்பவே சொன்னா லீக் ஆகிடும்.
விஜய்: என்ன மாதிரி பாட்டு அனி..
அனிருத்: சார் அரபிக் குத்து சார்..
விஜய்: புரியல என்ன
அனிருத்: சார் அரபிக் குத்து சார்
விஜய்: அரபிக் ஓகே குத்து ஓகே.. அது என்னய்யா அரபிக் குத்து.. புதுசா இருக்கு
நெல்சன்: அதை இப்பத்தான் அனிருத் கண்டு பிடிச்சிருக்காரு சார்
விஜய்: யோவ் என்னய்யா சயின்டிஸ்ட் மாதிரி பேசுற.. எங்க அனி பாடி காட்டு
அனிருத்: பாடுகிறார்..
விஜய்.. ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம்.. ஒன்ணுமே புரியல.. யாருய்யா எழுதுனது..
சிவகார்த்திகேயன் ஓட.. நெல்சன் அவரது கையை பிடிக்கிறார்.
நெல்சன்: புரியலதான் சார்.. ஆனா நல்லா வந்திரும் சார்.. எங்கள நம்புங்க சார்
வச்சு செய்த விஜய்
விஜய்: அப்படியெல்லாம் நம்ப முடியாது.. நீங்க என்னப் பண்ணுங்க.. பாட்ட எடுத்துட்டு நாளைக்கு 6 மணிக்கு வீட்டு வந்திருங்க.. நான் வச்சிறேன்.. நம்புனுமா.. நம்புறமாதிரியான மூஞ்சிகளா இது இரண்டும்.. ஜஸ்ட் மிஸ் ஆன நம்மளேயே ஏமாத்திருவாங்க போல..