Vijay interview: என்னைய அப்படி வளர்க்கல.! இதுதான் என் கடவுள் நம்பிக்கை! ஆன்மீகம் குறித்து அதிரடியாய் பேசிய விஜய்
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற 13 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதை ப்ரோமோட் செய்யும் விதமாக நடிகர் விஜய் சன் டிவிக்கு நேர்காணல் கொடுத்திருக்கிறார்.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற 13 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதை ப்ரோமோட் செய்யும் விதமாக 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய் சன் டிவிக்கு நேர்காணல் கொடுத்திருக்கிறார். இதில் பல விஷயங்களை பற்றி அவர் பேசியிருக்கிறார்.
இந்த நேர்காணலை பீஸ்ட் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எடுத்து இருக்கிறார். இந்த நேர்காணலில் படப்பிடிப்பின் போது நீங்கள் வெளிநாட்டுக்கு சென்று அங்கிருக்கும் கிறிஸ்துவ தேவலாயத்திற்கு செல்வதாக கூறி சென்றீர்கள். உண்மையில் தேவலாயம் செல்லவா வெளிநாட்டுக்கு சென்றீர்கள் என்று கேட்க, அதற்கு பதிலளித்த விஜய்,
விஜயின் பதில்
"ஆமாம்.. கடவுள் நம்பிக்கை எனக்கு உண்டு. சர்ச் போனால் ஒரு நல்ல ஃபீல் கிடைக்கும். பிள்ளையார் பட்டி விநாயகர் கோயில், திருநல்லாறு கோயில் போயிருக்கிறேன். அதே ஃபீல் அங்கும் கிடைக்கும். கத்தி பட சூட்டிங் அப்போ கடப்பா மாவட்டத்தில் அமீன் தர்கா சென்றேன். அங்கு அதே ஃபீல் இருந்தது. அம்மா இந்து, அப்பா கிறிஸ்தவர். காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அங்கே போனால் இங்கு வரக்கூடாது, இங்கே போனால் அங்கு வரக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. அதையே தான் என் குழந்தைகளுக்கும் சொல்கிறேன். சென்னையில் அடிக்கடி சர்ச் போக முடிவதில்லை. சார்ஜியா படப்பிடிப்பு செல்லும் போது சர்ச் பார்த்தேன். சென்னையில் தான் போக முடியவில்லை.. இங்கேயாவது போகலாம் என்று தான் அந்த சர்சுக்கு போனேன்." என்று பேசினார்.
நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாக உள்ள பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் (Beast) படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வெளியாக உள்ளது.
படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் ஒரு பகுதியாக, முதல் பாடல் கடந்த மாதம் 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதி அனிருத் இசையமைத்துள்ள அரபிக்குத்து பாடல் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஹிட் அடித்து இருக்கிறது. அதனைத்தொடர்ந்து வெளியான போஸ்டரும் வைரலான நிலையில், விஜய் குரலில் ‘ஜாலிலோ ஜிம்கானா’ பாடலும் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதனைத்தொடர்ந்து, படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
View this post on Instagram