Vijay Birthday: நடிக்க வருவதற்கு முன்பே 2 படங்களை தயாரித்துள்ள நடிகர் விஜய்.. யாரோட படங்கள் தெரியுமா?
தமிழ் சினிமாவின் தளபதியாக வலம் வரும் நடிகர் விஜய், நடிக்க வருவதற்கும் முன்பே 2 படங்களை தயாரித்து உள்ளார் என்பது பலரும் அறியாத தகவல். அதனைப் பற்றி காணலாம்.
![Vijay Birthday: நடிக்க வருவதற்கு முன்பே 2 படங்களை தயாரித்துள்ள நடிகர் விஜய்.. யாரோட படங்கள் தெரியுமா? Actor Vijay has produced 2 films before coming to act Vijay Birthday: நடிக்க வருவதற்கு முன்பே 2 படங்களை தயாரித்துள்ள நடிகர் விஜய்.. யாரோட படங்கள் தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/21/d57b5eb9478d96e8968c348083a3e9531687332101787572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவின் தளபதியாக வலம் வரும் நடிகர் விஜய், நடிக்க வருவதற்கும் முன்பே 2 படங்களை தயாரித்து உள்ளார் என்பது பலரும் அறியாத தகவல். அதனைப் பற்றி காணலாம்.
தனது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த விஜய் 1992 ஆம் ஆண்டு ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்த அவர், இந்த 31 ஆண்டுகளில் 66 படங்களில் நடித்து முடித்துள்ளார். அவரது 67வது படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படம் உருவாகி வருகிறது. இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் விஜய்யின் 68வது படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் மூலமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர். இப்படியான நிலையில் நம் அனைவருக்கும் விஜய்யை ஒரு நடிகராக, பாடகராக, நன்றாக நடனம் ஆடுபவராக மட்டுமே பெரும்பாலும் தெரிந்திருக்கும். ஆனால் நடிகர் விஜய் 2 படங்களை தன் சினிமா கேரியரில் தயாரித்துள்ளார் என்பது பலரும் அறியாத விஷயம். இவை எல்லாம் தன்னுடைய ஷோபா சந்திரசேகருக்காக தான். காரணம் இந்த படங்களை இயக்கியவரே அவர் தான்.
இந்த 2 படங்களையும் வி. வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இது ஷோபா சந்திரசேகருக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனம் ஆகும். நடிகர் விஜய் மற்றும் மறைந்த அவரின் தங்கை வித்யா ஆகியோரின் முதல் எழுத்து தான் வி.வி.கிரியேஷன்ஸ் ஆகும். 1984 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை சுமார் 12 படங்களை மட்டுமே இந்நிறுவனம் தயாரித்திருந்தது.
நண்பர்கள்
1991 ஆம் ஆண்டு ஷோபா சந்திரசேகர் இயக்கத்தில், நீரஜ், மம்தா குல்கர்னி, விவேக், தினேஷ், சுந்தர், ஷிலி கபூர், நாகேஷ், மனோரமா, சங்கீதா என பலரும் நடித்த படம் ‘நண்பர்கள்’. இப்படத்திற்கு திரைக்கதை எழுதியவர் எஸ். ஏ. சந்திரசேகர் ஆவார். பபுள் போஸ் இசையமைத்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் 200 நாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது.
இன்னிசை மழை
1992 ஆண்டு வெளியான இந்த படத்தில் நீரஜ், பர்வீன், விவேக், புதுமுகம் சுதாகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இதுதான் ஷோபா சந்திரசேகரின் முதல் படமாகும். இதே ஆண்டில் தான் விஜய் ஹீரோவாகவே அறிமுகமாகியிருந்தார். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)