ஜூன் வரைக்கும் இருக்கு.. இதுதான் சாட்சி.. இன்சூரன்ஸ் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்!
சிறிய காரில் விஜய் வந்தது ஒருபுறம் இருந்தாலும் அந்த காருக்கு இன்சூரன்ஸ் செலுத்தப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்தது.
சிவப்பு கார்...
கடந்த 19ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக நடந்து முடிந்தது நகரப்புற உள்ளாட்சித் தேர்தல். தமிழ்நாடு முழுவதுமே மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். தலைநகரான சென்னையில் வழக்கம்போல் மந்தமான வாக்குபதிவு இருந்தது. கலைத்துறையினர், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அஜித், சிம்பு போன்ற சிலர் ஊரில் இல்லை எனவும் அதனால் வாக்குகளை பதிவு செய்ய முடியவில்லை எனவும் தகவல் வெளியானது. இதற்கிடையே சென்னை நீலாங்கரை உள்ள வாக்குச்சாவடியில், தனது வாக்கை முதல் ஆளாக பதிவு செய்தார் நடிகர் விஜய்.
வாக்கை செலுத்துவதற்காக சிவப்பு நிற ஆல்டோ காரில் விஜய் வருகை தந்தார். பல பிராண்ட் சொகுசு கார்களை வைத்துள்ள விஜய் மிகச்சாதாரண ஆல்டோ காரில் வருகை தந்தது இணையத்தில் வைரலானது. முன்னதாக நடிகர் விஜய் கடந்த சட்டசபை தேர்தலில் சைக்கிளில் சென்று வாக்குப்பதிவு செய்த காட்சியும் வைரலானது. மிகவும் குறுகலான சாலை என்பதால் சிறிய காரை விஜய் பயன்படுத்தியதாக கூறப்பட்டது.
சர்ச்சை..
சிறிய காரில் விஜய் வந்தது ஒருபுறம் இருந்தாலும் அந்த காருக்கு இன்சூரன்ஸ் செலுத்தப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. விஜய் வந்த ஆல்டோ காரின் இன்சூரன்ஸ் காலவதியானதாகவும் கூறப்பட்டது. இதனால் சோஷியல் மீடியாவில் பலரும் விஜய்யை வறுத்தெடுத்தனர். அது தொடர்பான சில தகவல்களையும் பகிர்ந்தனர்.
விளக்கம்..
இந்நிலையில் இன்சூரன்ஸ் தொடர்பான சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளது விஜய் தரப்பு. அதன்படி விஜய் வந்த Maruti /Celerio ZXI மாடல் காருக்கு Own Damage இன்சூரன்ஸ், ஜூன் 16 2021 முதல் ஜூன் 15 2022 வரை உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் Third party insurance 2019ம் ஆண்டு மே மாதம் 29 முதல் 2022 மே 28 வரை வரை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய் வந்த குறிப்பிட்ட கார் ஜோசப் விஜய் என்ற பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
200 அடி பள்ளத்தாக்கில் சிக்கிக்கொண்ட இளைஞர்...! ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்ட இந்திய விமானப்படை..!
Munishkanth | கோயம்பேட்ல மூட்டை தூக்கி வாழ்க்கையை ஓட்டினேன்.. நினைவுகளை பகிர்ந்த முனிஸ்காந்த்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்