மேலும் அறிய

Munishkanth | கோயம்பேட்ல மூட்டை தூக்கி வாழ்க்கையை ஓட்டினேன்.. நினைவுகளை பகிர்ந்த முனிஸ்காந்த்!

சினிமா வாய்ப்பு கிடைக்கும் வரை கூலி வேலை, கோயம்பேட்டில் மூட்டை தூக்கும் வேலை போன்ற பல பணிகளை மேற்கொண்டேன்.

தமிழ் சினிமாவில் வில்லனா நடிக்கிறது தான் ஆசை ,ஆனால் ராட்சசன் படத்திற்குப் பிறகு எமோசனல் ரோல் தான் எனக்கு வருகிறது என வேதனையுடன் மனம் திறக்கிறார் நடிகர் முனிஸ்காந்த்.

தமிழ் சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் பலர் சென்னையை நோக்கி வருவார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவர் தான் ராமதாஸ் என்ற முனிஸ்காந்த். கடந்த 2002 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த அவர், சிறு வேடங்களில் நடித்துவந்தார். ஆனால் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே சினிமா வாய்ப்பு கிடைக்கும் வரை கூலி வேலை, கோயம்பேட்டில் மூட்டை தூக்கும் வேலை போன்ற பல பணிகளை மேற்கொண்டேன். எந்த நேரத்திலும் சினிமா வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த பணியில் இருந்தது தான் தனக்கு உதவியாக இருந்தது என சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

  • Munishkanth | கோயம்பேட்ல மூட்டை தூக்கி வாழ்க்கையை ஓட்டினேன்.. நினைவுகளை பகிர்ந்த முனிஸ்காந்த்!

இதோடு தமிழ் திரைப்படைத்துறையில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த இவர் தனது நண்பரான காளி வெங்கட் மூலம் ராமின் வெற்றிப்படைப்பான முண்டாசுப்பட்டி குறும்படத்தின் முனிஷ்காந்த் கதாபாத்திரத்திற்கு பின்னணிக்குரல் கொடுத்தார். இதன் பிறகே இவர் முனிஷ்காந்த் ராமதாஸ் என அழைக்கப்பட்டார். இதனையடுத்து கடல், சூது கவ்வும், பீட்டா 2 , வில்லா, பசங்க 2, 144,  மாநகரம், மரகத நாணயம், ராட்சசன் போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும் பேட்டியில் சம்பளத்த வாங்கிட்டு எப்போதும் நடிக்க மாட்டேன் என்றும்  விரும்பித்தான் எப்போதும் செல்வேன் என்றும் எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் தனது வேலைகளைச்செய்வேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் ராட்சசன் படத்திற்கு பிறகு எனக்கு எப்பவும் எமோசனல் கேரக்டர் தான் வருகிறது எனவும் ஆனால் எனக்கு வில்லன் கேரக்டரில் நடிக்கிறது தான் ஆசை என தெரிவித்துள்ளார். நாசர் தான் என்னோட ரோல் மாடல் அவரைப்போன்று நடிக்கத் தான் எப்போதும் ஆசைப்பட்டேன் ஆனால் இதுவரை அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. நிச்சயம் அதற்காகக் காத்திருப்பேன் என்றார்.

மேலும் என்னோட மனைவிக்கு சந்தானம் சார் ரெம்ப பிடிக்கும் என்பதால், அவர் சும்மா வந்து நின்னாலே பயங்கரமாக சிரிச்சு என்ன வெறுப்பேத்துவார் எனவும், உங்களுக்கு காமெடி ரோல் செட் ஆகல ராட்சசன் படத்துல வர மாதிரி எமோசனல் கேரக்டர் தான் நல்லா இருக்கு என்று அவரும் கூறுகிறார் எனத் தெரிவித்துள்ளார். இதோடு “என்னுடைய வாழ்க்கையை சீரழிக்க விக்கப்பீடியா முயன்றது எனவும், அதில் தனக்கு  56 வயது எனக் குறிபிட்டிருந்ததால் திருமணத்தில் பிரச்சனை“ ஏற்பட்டது. இதனையடுத்து திருமணத்திற்கு முன்னதாக என் மனைவி, உங்களுக்கு 56 வயதா? எனக்கேட்டவுடன், என்னுடைய அனைத்து கல்விச்சான்றிதழை போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பியதாகவும் நகைச்சுவையுடன் பகிர்ந்துள்ளார்.

  • Munishkanth | கோயம்பேட்ல மூட்டை தூக்கி வாழ்க்கையை ஓட்டினேன்.. நினைவுகளை பகிர்ந்த முனிஸ்காந்த்!

ரஜினியுடன் திரைப்பயணம்:

பேட்ட படத்தில் நடிகர் ரஜினியுடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு நல்ல அனுபவம் என்றும், அவரைப் பார்த்தவுடனே எனக்கு நடிக்க பயமா இருந்தது. விசில் அடித்து அவரை அழைப்பது போன்ற காட்சியை என்னால் நடிக்கமுடியவில்லை. பல டேக்குகள் சென்றதாகவும் கூறியுள்ளார். மேலும் நான் ரஜினி சாருக்கு தீவிர ரசிகர் என்றும் அவருடனே நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் என்ன செய்வது? என்ற குழப்பத்தில் இருந்ததால் அவருடன் நடிக்கவே பயம் என்றும் அவரிடம் சரியாக பேசக்கூட முடியவில்லை என பேட்டியில் முனிஸ்காந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB Vs PBKS Final: 18 வருட காத்திருப்பு ஓவர் - முதல் கோப்பையை வெல்லப்போகும் OG அணி எது? ஃபைனலில் பெங்களூரு - பஞ்சாப்
RCB Vs PBKS Final: 18 வருட காத்திருப்பு ஓவர் - முதல் கோப்பையை வெல்லப்போகும் OG அணி எது? ஃபைனலில் பெங்களூரு - பஞ்சாப்
Magnus Carlsen: கார்ல்சனை வெச்சு செய்த குகேஷ் - கடுப்பில் டேபிளை குத்தி ஆவேசம் - மாஸ் காட்டிய தமிழன்
Magnus Carlsen: கார்ல்சனை வெச்சு செய்த குகேஷ் - கடுப்பில் டேபிளை குத்தி ஆவேசம் - மாஸ் காட்டிய தமிழன்
Ukraines Drone Blitz: ரஷ்யாவிற்குள் இறங்கி அடித்த உக்ரைன் - ட்ரோன் தாக்குதலில் 40 போர் விமானங்கள் சேதம் - புதின் ஷாக்
Ukraines Drone Blitz: ரஷ்யாவிற்குள் இறங்கி அடித்த உக்ரைன் - ட்ரோன் தாக்குதலில் 40 போர் விமானங்கள் சேதம் - புதின் ஷாக்
மாஸ் என்ட்ரி கொடுத்த யூனவ்ஃபார் கப்பல்கள்.. இந்தியாவுடன் கைகோர்த்த ஐரோப்பிய யூனியன்.. உலகமே ஷாக்
மும்பையில் யூனவ்ஃபார் கப்பல்கள்.. இந்தியாவுடன் கைகோர்த்த ஐரோப்பிய யூனியன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB Vs PBKS Final: 18 வருட காத்திருப்பு ஓவர் - முதல் கோப்பையை வெல்லப்போகும் OG அணி எது? ஃபைனலில் பெங்களூரு - பஞ்சாப்
RCB Vs PBKS Final: 18 வருட காத்திருப்பு ஓவர் - முதல் கோப்பையை வெல்லப்போகும் OG அணி எது? ஃபைனலில் பெங்களூரு - பஞ்சாப்
Magnus Carlsen: கார்ல்சனை வெச்சு செய்த குகேஷ் - கடுப்பில் டேபிளை குத்தி ஆவேசம் - மாஸ் காட்டிய தமிழன்
Magnus Carlsen: கார்ல்சனை வெச்சு செய்த குகேஷ் - கடுப்பில் டேபிளை குத்தி ஆவேசம் - மாஸ் காட்டிய தமிழன்
Ukraines Drone Blitz: ரஷ்யாவிற்குள் இறங்கி அடித்த உக்ரைன் - ட்ரோன் தாக்குதலில் 40 போர் விமானங்கள் சேதம் - புதின் ஷாக்
Ukraines Drone Blitz: ரஷ்யாவிற்குள் இறங்கி அடித்த உக்ரைன் - ட்ரோன் தாக்குதலில் 40 போர் விமானங்கள் சேதம் - புதின் ஷாக்
மாஸ் என்ட்ரி கொடுத்த யூனவ்ஃபார் கப்பல்கள்.. இந்தியாவுடன் கைகோர்த்த ஐரோப்பிய யூனியன்.. உலகமே ஷாக்
மும்பையில் யூனவ்ஃபார் கப்பல்கள்.. இந்தியாவுடன் கைகோர்த்த ஐரோப்பிய யூனியன்
IPL MI vs PBKS Qualifier 2: ஸ்ரேயாஸ் எனும் சிங்கம்.. மும்பையே முடிச்சுவிட்ட பஞ்சாப்! இறுதிப்போட்டியில் ப்ரீத்தி ஜிந்தா பாய்ஸ்!
IPL MI vs PBKS Qualifier 2: ஸ்ரேயாஸ் எனும் சிங்கம்.. மும்பையே முடிச்சுவிட்ட பஞ்சாப்! இறுதிப்போட்டியில் ப்ரீத்தி ஜிந்தா பாய்ஸ்!
இளைஞர்களை ஏமாற்ற வரும் விஜய்.. மறைமுகமாக தாக்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இளைஞர்களை ஏமாற்ற வரும் விஜய்.. மறைமுகமாக தாக்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சாதியை அழிக்க முடியுமா? பிராமணர்கள் நிகழ்ச்சியில் தேவேந்திர பட்னாவிஸ் பளீச்
சாதியை அழிக்க முடியுமா? பிராமணர்கள் நிகழ்ச்சியில் தேவேந்திர பட்னாவிஸ் பளீச்
மதுரை மாவட்டம் நீங்கள் விரல் நீட்டுகின்ற திசை நோக்கி பயணிக்கும் - அமைச்சர் மூர்த்தி பேச்சு
மதுரை மாவட்டம் நீங்கள் விரல் நீட்டுகின்ற திசை நோக்கி பயணிக்கும் - அமைச்சர் மூர்த்தி பேச்சு
Embed widget