Actor Vadivelu: உடல்நலக்குறைவால் சகோதரர் மரணம்.. நிலைகுலைந்து போன வடிவேலு .. சோகத்தில் ரசிகர்கள்
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் சகோதரர் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் சகோதரர் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. நடிகர், பாடகர் என பல திறமை கொண்ட அவரின் நடிப்பில் கடைசியாக மாமன்னன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து சந்திரமுகி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இப்படியான நிலையில் வடிவேலுவின் சகோதரர் ஜெகதீசன் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடிவேலுவைப் போல சினிமாவில் வாய்ப்பு தேடிய ஜெகதீசன் ‘மலைக்கோவில் தீபம்’, ‘காதல் அழிவதில்லை’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இதனிடையே ஜெகதீசன் கல்லீரல் பாதிப்பால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதற்காக சிகிச்சை எடுத்து வந்த அவர், இன்று விரகனூரில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார்.
ஏற்கனவே வடிவேலுவின் தாயார் சரோஜினி வயது முதிர்வு காரணமாக கடந்த ஜனவரி மாதம் காலமானார். இப்படியான சூழலில் தம்பியும் மரணமடைந்துள்ளது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.